இனிமே நீங்க சொன்னா மட்டும் போதும்! யுபிஐ பரிவர்த்தனை.. G-PAY பயனர்களுக்கு புதிய அப்டேட்…
கூகுள் பே தனது பயனர்களுக்கு ஒரு அற்புதமான அம்சத்தைக் கொண்டு வரப் போகிறது, இது டிஜிட்டல் கட்டண உலகில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

டெல்லி : இந்தியாவில் UPI கட்டண செயலியான Google Pay-யில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. இதுவரை நீங்கள் கையால் டைப் செய்து தான் UPI மூலம் பணம் செலுத்தி வந்தீர்கள். ஆனால், விரைவில் நீங்கள் Google Pay-இல் பேசுவதன் மூலம் UPI பணம் செலுத்த முடியும்.
புதிய AI அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பயனர்கள் வாய்ஸ் கமெண்ட் மூலம் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். கூகுள் நிறுவனம் தற்போது இதற்கான பரிசோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், விரைவில் இது செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் படிக்காதவர்களும் எளிதாக பரிவர்த்தனை செய்ய முடியும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதில் அனைத்து இந்திய மொழிகளையும் சேர்க்க கூகுள் முயற்சித்து வருகிறது.
இருப்பினும், இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து குரல் அம்சம் பற்றிய அதிகமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், பேசுவதன் மூலம் ஆன்லைன் பணம் செலுத்துவது சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளைச் சமாளிக்க கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.
அந்த வகையில், இந்திய மொழிகளில் டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் “பாஷினி AI திட்டம்” உடன் கூகிள் இணைந்து செயல்படுவதால், இந்த அம்சம் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் UPI கட்டணத் துறையில் PhonePe மற்றும் Google Pay ஆகியவை மிகப்பெரிய நிறுவனங்களாகும். நவம்பர் 2024 அறிக்கையின்படி, மொத்த UPI பரிவர்த்தனைகளில் Google Pay 37% பங்கைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் PhonePe 47.8% உடன் முதலிடத்தில் உள்ளது.
இந்த இரண்டு தளங்களும் சேர்ந்து, UPI சந்தையில் 80% க்கும் அதிகமானவற்றைக் கைப்பற்றுகின்றன. கூகிள் பேவில் குரல் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், அதன் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், கூகிள் பேயின் இந்தப் புதிய குரல் அம்சம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய ஒரு பெரிய படியாக இருக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025