வாட்ஸ்அப்: வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு, அதாவது வாட்ஸ்அப் ஆதரவை வழங்கும் அனைத்து போன்களுக்கும் ஏற்றவாறு தற்போது 3 மூன்று முக்கிய அப்டேட்களை கொண்டு வருகிறது.
நம் வாழ்க்கையுடன் ஒரு பங்காகவே கலந்துள்ள இந்த வாட்ஸ்அப்பில் போன் காலிலும், வீடியோ காலிலும் பல அம்சங்களை கொண்டு வந்தாலும் பல குறைகளை, பல பயனர்கள் சுட்டி கட்டி கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், தற்போது அதற்கும் முற்று புள்ளி வைக்கும் வகையில் இரவோடு இரவாக 3 விதமான அசத்தல் அப்டேட்டை கொண்டுவந்துள்ளனர்.
இந்த 3 விதமான அப்டேட்டும் வாட்ஸ்அப் கால் தொடர்பான அப்டேட்கள் ஆகும். இந்த அப்டேட்கள் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் கூறும் பொழுது, “இந்த அப்டேட்கள் எல்லாம் வாட்ஸ்அப் கால்களை இன்னும் பெரியதாகவும், மேலும்சிறந்ததாகவும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன மற்றும் இந்த 3 அப்டேட்களுமே அடுத்த சில வாரங்களில் நடைமுறைக்கு வந்துவிடும்.
மேலும், கடந்த 2015-ம் ஆண்டு வாட்ஸ்அப்பில் காலிங் வசதியை கொண்டு வந்ததில் இருந்து, க்ரூப் கால்கள் (Group Calls), வீடியோ கால்கள் (Video Calls) மற்றும் மல்டி-பிளாட்ஃபார்ம் ஆதரவின் அறிமுகத்துடன், வாட்ஸ்அப் கால் வசதியை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். அந்த வரிசையில் மேலும் 3 அப்டேட்களை இதனுடன் இணைத்துள்ளோம்” , என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வீடியோக்களை பார்ப்பதற்கு உதவும் ஒரு அம்சமாகும். மேலும் தற்போது இது பயனர்கள் தங்கள் ஸ்க்ரீனை ஷேர் செய்யும் போது ஆடியோவையும் சேர்த்தே ஷேர் செய்யலாம். இது குறிப்பாக ஒரு ஆசிரியர்களுக்கும் அல்லது கம்ப்யூட்டர் திரையின் மூலம் பாடம் காற்றுக்கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அப்டேட் மூலம் வீடியோ காலில் 32 பேர் வரை ஒரே வீடியோ காலில் அரட்டை அடிக்கலாம். இந்த ஆதரவு ஐபோன்கள், ஆண்ட்ராய்டு, வெப் வெர்ஷன் என வாட்ஸ்அப் உள்ள அனைத்து
அனைத்து வித மொபைல்களுக்கும் இது பயன்பாட்டிற்க்கு வந்துவிடும். இதனால், அதிக நபர்கள் உள்ள நண்பர்கள் குழுவிற்கு ஏற்ற ஒரு அம்சமாக இருக்கும்.
இது வீடியோ காலில் யார் பேசுகிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடிக்கும் ஒரு அம்சமாகும். ஒரு வீடியோ காலில் அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யார் பேசுகிறார்கள் என்பதை கண்டறிவது சில நேரங்களில் சிக்கலாக இருக்கும். அதனால், இந்த அப்டேட் மூலம் அந்த சிக்கல் இனி இல்லாமல் பார்த்து கொள்ளலாம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…