இனிமே இவர்களுக்கு மட்டும்தான் இந்த அம்சம்..! ட்விட்டர் அதிரடி அறிவிப்பு..!
ட்விட்டர், ப்ளூடிக் உள்ள பயனர்கள் தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து புதுப்புது மாற்றங்களை செய்து பயணங்களை முறைப்படி வைத்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது, ட்விட்டர் இந்த வாரத்தில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிடும் என்று கூறியுள்ளார்.
அது என்னவென்றால், ப்ளூடிக் உள்ள பயனர்கள் மட்டுமே தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்ப முடியும். ப்ளூடிக் இல்லாதவர்கள் தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்ப முடியாது.
ஒரு பயனர் எனது டிஎம் (DM) முழுவதும் ஸ்பேம் செய்திகளாக உள்ளன. இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. என்று கூறியுள்ளார். அதற்கு உங்கள் டிஎம் ஸ்பேம் வரவிருக்கும் வாரங்களில் கணிசமாகக் குறையும். என்று T(w)itter Daily News என்ற கணக்கு பதிலளித்துள்ளது.
இந்த இரண்டு ட்வீட்களுக்கும் பதிலளித்த எலான் மஸ்க், இந்த வாரம் புதுப்பிப்பு வெளியிடப்படும் என்று நம்புகிறேன். நான் பலமுறை கூறியது போல, ஏஐ (AI) போட்களை வேறுபடுத்துவது கடினமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
Hopefully releasing the update this week.
As I’ve said many times, it is increasingly difficult to distinguish between AI bots. Soon, it will be impossible.
The only “social networks” that survive will be those that require verification. The payment system is a means of…
— Elon Musk (@elonmusk) June 11, 2023