தொழில்நுட்பம்

இனி வாட்சப்பிலும் ‘ஸ்க்ரீன் ஷேரிங்’ வசதி… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்.!

Published by
Muthu Kumar

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் திரைப்பகிர்வு(Screen Sharing) வசதியை விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் கொண்டுவர இருக்கிறது.

வாட்ஸ்அப்பை எப்போதும் அதிக அம்சங்கள் நிறைந்த செயலியாக வைத்திருப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் அந்நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. பயனர்களின் வசதி மற்றும் எளிமையாக உபயோகப்படுத்துதல் இவற்றை கருத்தில் கொண்டு அவ்வப்போது வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

Whatsapp update [Image- DigitalTrends]

இதன்படி மெட்டா நிறுவனம் அதன் தளமான வாட்ஸ்அப்பில், புதிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. WABetaInfo இன் அறிக்கையின்படி மெட்டா நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஒரு புதிய அம்சத்தை (பீட்டா) சோதனை செய்து வருகிறது, அதாவது கூகுள் மீட் மற்றும் ஜூம்(Zoom)  போன்ற வீடியோ கான்பரன்சிங் தளங்களில் இருப்பது போல் பயனர்கள் தங்களது ஸ்கிரீன்களை ஷேர் செய்ய முடியும்.

வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பு வசதி நீண்டகாலமாக இருக்கிறது, சமீபத்தில் கூட  வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணைப்பில் இருக்கும்படியான அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால் அதிலும் திருப்தி அடையாத மெட்டா நிறுவனம் தற்போது பயனர்களுக்கு ஸ்க்ரீன் ஷேரிங் வசதியையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.

WhatsapVC [Image- TrustedReview]

கூகுள் மீட் மற்றும் ஜூம் போன்ற செயலிகளில், வீடியோ அழைப்பில் பயனர்கள் தொடர்பில் இருக்கும் போது, மற்ற பயனர்களுக்கு தங்களது (மொபைல்/கணினி) திரையில் இருப்பதை பகிர்வதற்கு இது போன்ற ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் இருக்கும், தற்போது வாட்ஸ்அப்பிலும் அதே போன்று பயனர்கள் தங்களது மொபைல் திரையைப் பகிர்வதற்கு ஒரு புதிய அம்சத்தை மெட்டா சோதனை செய்து வருகிறது.

பெரும்பாலும் கொரோனா காலகட்டத்தின் போது பெரும் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்த படி வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியது, அத்தகைய சமயத்தில் வீடியோ அழைப்புகள் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரே இணைப்பில் அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை இதுபோன்ற ஸ்க்ரீன் ஷேரிங் வசதி வழியாக அனைவரும் பார்க்கும்படி பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Screenshareoption [FileImage]

தற்போது அதேபோல் வாட்ஸ்அப்பில் ஸ்க்ரீன் ஷேரிங் செய்வதற்கு பயனர்கள் அழைப்பைத் தொடங்கியவுடன், இடதுபக்கம் கீழ்முனையில் உள்ள ஸ்கிரீன் ஷேர் விருப்பத்தைத் தேர்வு செய்து தங்களது திரையில் இருப்பதை பகிர்ந்து கொள்ளலாம். ஸ்க்ரீன் ஷேரிங் தொடங்கியவுடன் திரையில் நாம் பார்க்கும்/செய்யும் அனைத்தையும் (குறிப்பாக குறுஞ்செய்திகள், கடவுச்சொற்கள், தொலைபேசி எண்கள், போட்டோக்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள்) மற்றவர்களும் பார்க்கமுடியும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, இரு தரப்பிலும் வாட்ஸ்அப்பை அப்டேட்டில் வைத்திருந்தால், மட்டுமே வாட்ஸ்அப் திரைப் பகிர்வு வேலை செய்ய வாய்ப்புள்ளது. தற்போது, இந்த அம்சம் இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது மற்றும் அடுத்த சில வாரங்களில் வாட்ஸ்அப்பில் இந்த ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</


p>

Published by
Muthu Kumar

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

14 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

15 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

15 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

16 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

16 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

17 hours ago