Nothing Phone 2A : பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) என்ற நிகழ்வுக்கு விரைவில் வெளியாகவுள்ள நத்திங் ஃபோன் 2A தாமதமாக வந்துள்ளது.
உலகளவில் ஸ்மாட்ர்போன் சந்தையில் ட்ரான்ஸ்பேரன்சி என்ற வடிவமைப்புடன் வெளியான Nothing போன்கள் மக்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, கடைசியாக Nothing Phone 2 வெளியாகி ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் கவரும் விதமாக அமைந்தது. இதையடுத்து, தற்போது நத்திங் நிறுவனம் விரைவில் தனது புதிய பட்ஜெட் பிரெண்டிலி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அந்தவகையில், நத்திங் போன் 2a (Nothing Phone 2A) மாடலின் புகைப்படங்கள் சமீபத்தில் அதன் வலைதளத்தில் வெளியானது. இந்த புதிய பட்ஜெட் பிரெண்டிலி ஸ்மாட்ர்போனான Nothing Phone 2A இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் கடந்த சில நாட்களாக பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) என்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களது புது புது கண்டுபிடிப்புகள் மற்றும் சந்தைக்கு வரவிருக்கும் புதிய சாதனைகளை பொதுவெளியில் வெளியிட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போ வாசிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நத்திங் ஃபோன் 2A-ஆனது பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் அரங்கிற்கு தாமதமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நத்திங் ஃபோன் 2A ஸ்மார்ட்போன் மார்ச் 5ம் தேதி சந்தையில் வெளியாக உள்ள நிலையில், அதன் முழு வடிவமைப்பு மற்றும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வந்ததால், அந்நிகழ்வுக்கு தாமதமாக வந்துள்ளது. அதன்படி, கடந்த செவ்வாயன்று இந்த ஃபோன் மொபைல் வேல்டு அரங்கிற்கு வந்து சேர்ந்தது என்றும் நத்திங்’ஸ் யூடியூப் சேனலில் ஒரு அன்பாக்சிங் வீடியோவை வெளியிடப்பட்டது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…