மொபைல் வேர்ல்டுக்கு தாமதமாக வந்த Nothing Phone 2A.. வெளியீடு எப்போது? முக்கிய அம்சம் என்ன?

nothing phone 2a

Nothing Phone 2A : பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) என்ற நிகழ்வுக்கு விரைவில் வெளியாகவுள்ள நத்திங் ஃபோன் 2A தாமதமாக வந்துள்ளது.

உலகளவில் ஸ்மாட்ர்போன் சந்தையில் ட்ரான்ஸ்பேரன்சி என்ற வடிவமைப்புடன் வெளியான Nothing போன்கள் மக்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, கடைசியாக Nothing Phone 2 வெளியாகி ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் கவரும் விதமாக அமைந்தது. இதையடுத்து, தற்போது நத்திங் நிறுவனம் விரைவில் தனது புதிய பட்ஜெட் பிரெண்டிலி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

Read More – மிரட்டலாக வெளிவர காத்திருக்கும் ஐபோன் 16 சீரிஸ்… எதிர்பார்ப்பில் ஆப்பிள் ரசிகர்கள்!

அந்தவகையில், நத்திங் போன் 2a (Nothing Phone 2A) மாடலின் புகைப்படங்கள் சமீபத்தில் அதன் வலைதளத்தில் வெளியானது. இந்த புதிய பட்ஜெட் பிரெண்டிலி ஸ்மாட்ர்போனான Nothing Phone 2A இந்தியாவில் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் கடந்த சில நாட்களாக பார்சிலோனாவில்  மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) என்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது.

Read More – 100 மணிநேர பேட்டரி பேக்கப்.. அசத்தலான ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது OnePlus!

இந்த நிகழ்வில் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களது புது புது கண்டுபிடிப்புகள் மற்றும் சந்தைக்கு வரவிருக்கும் புதிய சாதனைகளை பொதுவெளியில் வெளியிட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஸ்மார்ட்போ வாசிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நத்திங் ஃபோன் 2A-ஆனது பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட்  அரங்கிற்கு தாமதமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Read More – நாங்கள் தவறு செய்துவிட்டோம்… ஜெமினி AI சர்ச்சை குறித்து சுந்தர் பிச்சை ஓபன் டாக்!

நத்திங் ஃபோன் 2A ஸ்மார்ட்போன் மார்ச் 5ம் தேதி சந்தையில் வெளியாக உள்ள நிலையில், அதன் முழு வடிவமைப்பு மற்றும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வந்ததால், அந்நிகழ்வுக்கு தாமதமாக வந்துள்ளது. அதன்படி, கடந்த செவ்வாயன்று இந்த ஃபோன் மொபைல் வேல்டு அரங்கிற்கு வந்து சேர்ந்தது என்றும் நத்திங்’ஸ் யூடியூப் சேனலில் ஒரு அன்பாக்சிங் வீடியோவை வெளியிடப்பட்டது.

நத்திங் ஃபோன் 2A அம்சங்கள்:

  • நத்திங் போன் 2ஏ-வில் 6.7-இன்ச் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) வசதியைக் கொண்டுள்ளது.
  • 50எம்பி Samsung ISOCELL S5KGN9 பிரைமரி கேமரா + 50எம்பி ISOCELL JN1 அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். செல்பிகளுக்கு 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது.
  • 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 43 வாட்ஸ் பாஸ்ட் ஜார்ஜ் அமைப்புடன் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் ( MediaTek Dimensity 7200 SoC) வசதியுடன் இந்த நத்திங் போன் 2ஏ மாடல் வெளிவரும்.
  • மேலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மற்றும் வெள்ளை, கருப்பு என்ற இரு நிறங்களில் வெளிவருகிறது. இந்த நத்திங் 2A போனின் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், இந்த ஃபோன் பட்ஜெட் பிரெண்டிலியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்