இந்த வாரம் அறிமுகமாகிறதா நத்திங் ஃபோன் 2ஏ.? வெளியான மறைமுக அப்டேட்!

Nothing Phone 2a

நத்திங் டெக்னாலிஜி நிறுவனம் இதுவரை நத்திங் போன் 1 (Nothing Phone 1), நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மாடல்களும் அதன் ட்ரான்ஸ்பெரென்ட் ஆன பின்புற வடிவமைப்பினால் வாடிக்கையாளர்களிடம் அதிகாமாக பேசப்பட்டதோடு, விற்பனையிலும் பட்டையை கிளப்பியது.

இப்போது நத்திங் தனது அடுத்த தயாரிப்பான நத்திங் போன் 2ஏ-வை (Nothing Phone 2a) இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இப்போது நத்திங் தனது எக்ஸ் பக்கத்தில், இந்த வாரத்தில் ஏதோ ஒன்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது எந்த தயாரிப்பு என்பதை தெரியப்படுத்தவில்லை.

வெறும் ரூ.14,000 பட்ஜெட்..8ஜிபி ரேம்..50எம்பி கேமரா.! அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் 70.!

இருப்பினும் நத்திங் போன் 2ஏ இந்த வாரத்தில் அறிமுகமாகலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது. இதனை பல டீப்ஸ்டர்களும் உறுதிப்படுத்திக் கூறிவருகின்றனர். அதன்படி டிப்ஸ்டர் இஷான் அகர்வால், டிப்ஸ்டர் இஷான் யாதவ் உள்ளிட்டோர் நத்திங் போன் 2ஏ அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரி ஸ்மார்ட்போனின் விவரங்களை வெளியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, AIN142 என்ற மாடல் எண்ணைக் கொண்டிருக்கும் நத்திங் போன் 2ஏ ஆனது சென்டர் பன்ச் ஹோல் கட்டவுட்டுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் அளவிலான அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கலாம். பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷுடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) 50 எம்பி டூயல் கேமரா இருக்கலாம்.

வெறும் ரூ.6,699..8ஜிபி ரேம்..டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்.! இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் கோ 2024.!

செல்ஃபிக்காக 16 எம்பி கேமரா பொருத்தப்படலாம். அதிக நேரப்பயன்பாட்டிற்காக 4920mAh பேட்டரி பொருத்தப்படலாம். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 இருக்கலாம். நத்திங் போன் 2ஏ-ல் பொருத்தப்பட்டுள்ள பிராஸசர், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது மாற்ற மாடல்களை விட மிகவும் மலிவு விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்