நீண்ட காலமாக ஆக்டிவில் இல்லையா..? ட்வீட்டர் கணக்குகள் நீக்கம்..எலான் மஸ்க் அதிரடி.!!
உலகம் முழுவதும் பலரும் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை உபயோகம் செய்து வருகிறார்கள். பலரும் தகவல்களை தெரிந்து கொள்ளவும், தகவல்களை பரப்புவதற்கும் அதிகமாக ட்வீட்டரை உபயோகம் செய்து வருகின்றனர். இத்தகைய ட்விட்டரில் அடிக்கடி பது புது அப்டேட்டுகளை உரிமையாளர் எலான் மஸ்க் செய்து வருகிறார்.
அந்த வகையில் நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகள் இருந்தால் அவர்களுடைய கணக்கை நீக்கம் செய்யப்பட போவதாக எலான் மஸ்க் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து எலான் மஸ்க் டிவிட்டரில் கூறியதாவது ” பல ஆண்டுகளாக எந்த செயல்பாடும் இல்லாத கணக்குகளை நாங்கள் நீக்குகிறோம், எனவே அவர்கள் உங்களை பின்தொடர்பவர்காலாக இருந்தால் உங்களது ஃபாலோவர் எண்ணிக்கை குறைவதை நீங்கள் காணலாம்” என பதிவிட்டுள்ளார்.
We’re purging accounts that have had no activity at all for several years, so you will probably see follower count drop
— Elon Musk (@elonmusk) May 8, 2023