புதிய அம்சத்துடன் வெளியானது Noise-ன் Fit Twist Go ஸ்மார்ட் வாட்ச் ..! விலை என்ன தெரியுமா ..?

Noise Smartwatch : புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ சாதனைகளுக்கு தனித்துவம் வாய்ந்த நிறுவனமான Noise (நாய்ஸ்), ஸ்மார்ட் வாட்ச்களில் கவனம் செலுத்தி பிரத்யேகமாக தயாரித்து வருகிறது. அதே போல் தற்போது, Noise நிறுவனம் புதிய Noise Fit Twist Go Smartwatch-ஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

இதனது அம்சமே, 1 வாரம் நீடித்து சார்ஜ் தாங்கும் பேட்டரி அம்சத்தில் உருவாகியுள்ளது. இந்த Noise Fit Twist Go ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் Noise நிறுவனம் நேற்று (பிப்ரவரி 28) வெளியிட்டுள்ளது. இந்த Noise Fit Twist Go ஸ்மார்ட் வாட்சை பளபளப்பான உலோகம் கொண்டு உருவாக்கியுள்ளனர். மேலும், இதில் புளூடூத் அழைப்பு வசதி, இதய துடிப்பை கண்காணிப்பது, ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவற்றை கண்காணிப்பது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் செயல்பாடுகள் போன்ற பல்வேறு சுகாதார கண்காணிப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

Read More :- Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

இதனது, டிஸ்ப்ளெ 1.39-இன்ச் கொண்ட வட்ட TFT டிஸ்ப்ளேயாகும். இது வட்ட வடிவிலான டயலுடன் நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ளது.  இது IP67 மதிப்பீடை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சிலிருந்தே நேரடியாக போன் பேசலாம். மேலும், டயல் செய்வதற்கு எளிதாக டைல்பேடும் (Dial Pad) உள்ளது. இதில், 8 தொடர்புகளையும் (Contacts) சேமிக்கலாம்.

Read More :- வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய வாட்ஸ்அப் மெசேஜை ஒரு நொடியில் பார்க்கலாம்…!

இதனது சிறப்பு அம்சமே இந்த ஸ்மார்ட் வாட்சின் பேட்டரி ஆனது 1 வாரம் சார்ஜ் தாங்கும் பேட்டரியால் வடிவமைக்கபட்டது என கூறி உள்ளனர். ஜெட் பிளாக், சில்வர் கிரே, ரோஸ் பிங்க், எலைட் பிளாக், எலைட் சில்வர், கோல்ட் லிங்க், பிளாக் லிங்க் மற்றும் சில்வர் லிங்க் உள்ளிட்ட எட்டு வண்ணங்களில் இந்த Noise Fit Twist Go ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் கிடைக்கின்றன.

இத்தனை அம்சம் கொண்ட ஸ்மார்ட்வாட்ச்சின் விலையானது இந்தியாவில் ரூ.1,199 ரூபாய்-க்கு விற்பனையாகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சை தற்போது ஸ்மார்ட்வாட்ச் Goonies மற்றும் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்