ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் அகற்றப்பட்டது புதிய ‘எக்ஸ்’ லோகோ..!
ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவானது சமீபத்தில் எக்ஸ் என மாற்றப்பட்டது. அதன் உரிமையாளரான எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசம் கொண்டுவந்த பிறகு அதன் நீண்டகால சின்னமாக இருந்த நீல நிறப்பறவை நீக்கப்பட்டு எக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது.
இதன்பிறகு, அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நீலப்பறவை லோகோ அப்புறப்படுத்தப்பட்டு, புதிய ‘எக்ஸ்'(X) எனும் எழுத்து அலுவலகத்தின் உயரத்தில் வைக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது, நிறுவனம் அந்த எக்ஸ் லோகோவை அகற்றப்பட்டுள்ளது.
இந்த முடிவானது மக்கள் புகாரளித்த நிலையில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அந்த புகார்களில் அலுவகத்தில் மீது வைக்கப்பட்டுள்ள எக்ஸ் லோகோவில் இருந்து வரும் அதிக தீவிரமான வெள்ளை ஸ்ட்ரோபோஸ்கோபிக் ஒளி மக்களுக்கு கண்களை பாதிப்பதோடு எரிச்சலை ஏற்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த எக்ஸ் அடையாளம் நிலையற்றதாக உள்ளது. ஒரு அழுத்தமான நிலநடுக்கம் ஏற்பட்டால், லோகோ கீழே விழுந்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இவ்வாறு எண்ணற்ற புகார்கள் வந்தமையால் நிறுவனம் லோகோவை அகற்றியதாக கூறப்படுகிறது.