இ-சிம் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாட்ச்..!

Published by
Dinasuvadu desk

 

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக செல்லுலார்/LTE வெர்சன் ஆப்பிள் வாட்ச் தொடர் 3-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது .

Image result for Apple watch with e-SIM technology இதற்கு முன்பாகவே, இந்த ஆப்பிள் வாட்ச்க்கு சேவை வழங்கும் அளவிற்கு யுனிபைட் லைசென்ஸ் கூறியபடி உட்கட்டமைப்பு வசதிகள் ஏர்டெல்லிடம் இல்லை என DoT யிடம் புகார் அளித்துள்ளது ஜியோ

இ-சிம் தொழில்நுட்பம் என்றால் என்ன?

ஆப்பிள் நிறுவனத்தால் உலகம் முழுக்க அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய தொழில்நுட்பம், இந்தியாவில் அதன் முந்தைய ஆப்பிள் வாட்ச் வெர்சன்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும்,இனி போனில் இருந்து சுதந்திரமாக தனித்து செயல்படக் கூடியதாகவும் இருக்கும். ஆப்பிள் வாட்ச் உங்கள் போன் எண்ணின் நீட்சியாக நெட்வொர்க் உடன் இணைய முடியும். ஒருமுறை நெட்வொர்க் உடன் இணைத்துவிட்டாலே, இந்த வாட்ச் தனித்து அழைப்புகளை மேற்கொள்ளவும், பாடல்களை இசைக்க, ஓலா மற்றும் உபரை அழைக்க இணையத்தை பயன்படுத்தவும் ஆரம்பித்துவிடும்.

ஆனால் இவற்றையெல்லாம் செய்ய ஐபோனுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை. ஆப்பிள் வாட்ச்சில் பயன்படுத்தும் இந்த புதிய தொழில்நுட்பம், இ-சிம்மை அடிப்படையாக கொண்டது. ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போனில் பயன்படுத்தும் சாதாரண சிம் போல இல்லாமல், இந்த இ-சிம்மை பயனர்கள் மாற்றவே , பறிமாற்றிக்கொள்ளவோ முடியாது. வாட்ச்சிலேயே உள்ள ஆண்ட்டனா மூலம் யுனிவர்செல் மொபைல் டெலிகம்யூனிகேசன் சிஸ்டம் ரேடியோவை பயன்படுத்தி நெட்வொர்க்கில் இணைய முடியும். இன்டர்நேசனல் மொபைல் சப்ஸ்கிரைபர் ஐடென்டிடி (IMSI) எண்ணை சேமித்து கொள்வதன் மூலம் அழைப்புகளை இணைக்கவும், ஐபோன் பயனர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தால் வாட்ச்சுக்கு அழைப்பை திருப்பவும் முடியும்

இந்த சேவைக்கு இந்தியாவில் கூடுதல் கட்டணம் இல்லை இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் வாட்ச் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை என்னவென்றால், இந்த சேவைக்கு தனியே கட்டணம் இல்லை. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை போல தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆப்பிள் வாட்ச் சேவைக்கு தனி கட்டணம் வசூலிக்காமல், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள திட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இந்த சேவையை வழங்குகின்றன.

ஆப்பிள் வாட்ச்கள் புவியியல் அமைப்பை பொறுத்தது என்பதால், அமெரிக்காவில் வாங்கும் வாட்சுகள் இந்தியாவில் இயங்காது என்பதை நினைவிற் கொள்ளவும். இந்த இ-சிம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் தனது கியர் S2 3G யில் பயன்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஐபாட் பாரோ மாடல்களில் சாதாரண சிம்மிற்கு பதில் ஆப்பிள் சிம் மூலம் லோக்கல் நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடனும்.. கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்..”- நடிகை குஷ்பு கலகல!

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…

1 minute ago

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…

34 minutes ago

2 செயற்கைக்கோள் தூரம் குறைப்பு… கடைசியில் இஸ்ரோ எடுத்த முடிவு!

டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…

55 minutes ago

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

15 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

16 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

16 hours ago