சாம்சங் பே சேவையில் புதிய அப்டேட்..!

Default Image

 

தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் ஏற்கனவே இந்தியாவில் சாம்சங் பே சேவைகளை அறிமுகம் செய்துள்ளது, இந்நிலை அந்த சேவைக்கு புத்தம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசா, மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்கள் எக்ஸ்பிரஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் சாம்சங் ஒப்பந்தம் மேற்க்கொண்டுள்ளது.

மேலும் சாம்சங் பே சேவைப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது சாம்சங் நிறுவனத்தின் பார்வை சற்று அதிகமாகத்தான் உள்ளது, குறிப்பாக இந்திய மார்க்கெட்டில் சாம்சங் மேலும் கொடிகட்டி பறக்க துவங்கியுள்ளது.

நீங்கள் ஆன்லைனில் வொர்க் செய்பவராக இருந்தால் நீங்கள் பேபால் என்ற பெயரை அடிக்கடி கேள்வி பட்டிருக்கலாம். காரணம் பெரும்பாலான ஆன்லைன் வொர்க் செய்ய கூடிய தளங்கள் பேபால் மூலமாக தான் உங்களுக்கு உங்கள் வருமானத்தை அனுப்புகின்றன.

பேப்பால் தளத்தின் மூலம் நீங்கள் எவ்வித செலவும் இன்றி உங்கள் வருமானத்தை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும், குறிப்பாக இந்த பேபால் அக்கவுண்ட்டை தொடங்குவதற்கு எவ்வித கட்டணமும் தேவையில்லை.

இந்நிலையில் பயனர்களின் நன்மையை கருதி புதிய வசதியைக் கொண்டுவந்துள்ளது, அதன்படி ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பேபாலினி சாம்சங் பே வசதியுடன் இணைந்துப் பயன்படுத்த முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பல்வேறு மக்களுக்கு இந்த சேவை உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் பே சேவையானது சாம்சங் நிறுவனத்தின் மாக்டிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் என்ற தொழில்நுட்பம் மற்றும் நியர் ஃபீல்டு கம்யூனிகேஷன் போன்றவற்றின் மூலம் வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் பே சேவை.

சாம்சங் பே சேவையில் பதிவு செய்யப்பட்டுள்ள கார்டுகளை கொண்டு பணம் செலுத்த முடியும். பதிவு செய்யப்பட்ட கார்டுகளை கொண்டு கியூ ஆர் கோடு ஸ்கேனிங்இ ஒன்-டைம் பாஸ்வேர்டு உள்ளிட்டவை மூலம் பாதுகாப்பான பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இப்போது சாம்சங் பே மற்றும் பேபால் இணைந்துள்ளதால் அனைத்து மக்களுக்கும் பணப்பரிமாற்றம் செய்ய மிக எளிமையா இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்