இன்ஸ்டாகிராம்-ன் புதிய அப்டேட் ..!!

Published by
Dinasuvadu desk
இன்ஸ்டாகிராம் ,ஸ்டோரிஸ் மற்றும் போஸ்டுகளில் போட்டோ எடுக்கும் பயனர்களுக்காக போகஸ் என்னும் புதிய வசதியை, அப்டேட்டாக வழங்கியுள்ளது . இந்த புதிய வசதியானது ஏற்கனவே பல போன்களில் இருக்கும் போர்ட்ரேட் வசதியை ஒத்தது. ஆண்ட்ராய்டு அப்டேட் கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஐ ஓ.எஸ் க்கு இன்ஸ்டாகிராம் வெர்சன் 39.0 ஆகவும் உள்ளது.

போகஸ் வசதியை பயன்படுத்த பயனர்கள் முதலில் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள கேமராவை திறக்க வேண்டும். அதில் சூப்பர் ஜூம் ஆப்சனுக்கு அருகில் போகஸ் ஆப்சனை பார்க்கலாம். இந்த போகஸ் வசதி முன்புறம் மற்றும் பின்புறம் என இருபுறங்களில் உள்ள கேமராவிலும் செயல்படும்.

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், பயனர்கள் போட்டோ மற்றும் வீடியோவும் எடுக்க முடியும். பயனர்கள் திரையில் கிளிக் செய்வதன் மூலம் போட்டோவும், திரையை அழுத்தி பிடிப்பதன் மூலம் வீடியோவும் எடுக்கலாம்.

பின்னர் போட்டோவை அப்படியேவோ அல்லது எமோஜி/ஸ்டிக்கர்கள் கொண்டு எடிட் செய்தோ பயன்படுத்தலாம். மேலும் அந்த போட்டோக்களை போஸ்ட் அல்லது ஸ்டோரியாக போடவோ, நேரடியாக மெசேஜாகவோ அனுப்பலாம்.

இந்த போகஸ் என்னும் புதிய வசதி, போட்டோவின் பின்புறத்தை ப்ளர் செய்து முக்கியமானவற்றை போகஸ் செய்ய உதவும் ஆப்பிளின் போர்ட்ரேட் மோடுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது.

மொபைல் டூயல் கேமரா செட்டப்பை உபயோகிக்கும் போது, இன்ஸ்டாகிராம் கேமரா மென்பொருளை பயன்படுத்துகிறது. தற்போது இந்த வசதி ஐபோன் SE, 6S,6S+, 7,7+,8,8+,X மற்றும் சில ஆண்ராய்டு போன்களிலும் கிடைக்கிறது.

இந்த அப்டேட்டில் போகஸ் வசதியுடன், ஐபோன் பயனர்களுக்கு மட்டும் @mention ஸ்டிக்கர் என்னும் வசதியையும் அளித்துள்ளது. இதன் மூலம் @mention ஸ்டிக்கரை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இழுத்து மற்ற பயனர்கள் பெயரை டைப் செய்து அவர்களை குறிப்பிடலாம். @mention ஸ்டிக்கரையும் மற்ற இன்ஸ்டாகிராம் ஸ்டிக்கர்களை போல எளிதாக எடிட் செய்ய முடியும்.

Recent Posts

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!  

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

6 hours ago

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

7 hours ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

9 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

9 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

10 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

11 hours ago