தமிழக அரசின் சார்பில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் புதிய உழவன் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த உழவன் ஆப் வசதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் 2018-2019 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டின் போது துணை முதல்வர், நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்ததன் படி இந்த புதிய உழவன் ஆப் நேற்று விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
குறிப்பாக அனைத்து விவசாயிகளுக்கும் இந்த ஆப் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உழவன் மொபைல் ஆப் பொறுத்தவரை வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர் காப்பீடு விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக அறிவிக்கப்படும். மேலும் டிராக்டர்,பவர் டில்லர் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் போன்றவற்றிர்கான மானியம் பெற முன்பதிவு செய்ய முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேருந்து நிலையங்கள், வணிக வளாங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்சமயம் சென்னை திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இச்சேவையானது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக பொதுமக்கள் ஒரு நாளை 20 நிமிடங்கள் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…