இந்த ஸ்மார்ட் போனுக்கு 50 நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் போட்டால் போதும்! காரணம் என்ன?
ஸ்மார்ட் போன் எவ்வளவு தான் ஸ்மார்ட்டாக இருந்தாலும் அதிக நேரம் சார்ஜ் நிற்கவில்லை என்றால் அந்த போன் இருந்தும் இல்லாததற்கு சமம் தான். பலவித ஸ்மார்ட் போன்கள் தினமும் சந்தையில் வந்து குவிந்தாலும் ஒரு சில ஸ்மார்ட் போன்கள் மட்டுமே நீண்ட நேரம் சார்ஜ் நிற்க கூடியதாக இருக்கும்.
அந்த வகையில் தற்போது ஒரு நிறுவனம் ஒரு புதுவித ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சத்தை கேட்டால் நீங்களே வாயை பிளப்பீர்கள் மக்களே!
பெயர் என்ன?
வெளியூர் சென்றாலோ, அல்லது அவசரத்திற்காகவோ நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் போது அதன் சார்ஜ் சட்டென குறைந்து விடும். ஆனால், இந்த Energizer Power Max P18K Pop என்கிற ஸ்மார்ட் போன் மட்டும் பல நாட்கள் சார்ஜ் குறையாமலே இருக்கிறதாம். இந்த செய்தியை கேட்டு பலரும் வியப்பில் உள்ளனர்.
எவ்வளவு நேரம்?
நேர கணக்கில் சார்ஜ் போட்டாலும், நிமிட கணக்கில் மட்டுமே சார்ஜ் இருக்கும் மொபைல்களுக்கு மத்தியில் இந்த வியக்கத்தக்க ஸ்மார்ட் போன் சுமார் 50 நாட்கள் வரை சார்ஜ் தாங்கும் என இந்த போனின் நிறுவனமான ஆவெனிர் கூறியுள்ளது. இந்நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.
சிறப்பம்சம்
இந்த ஸ்மார்ட் போன் கிட்டத்தட்ட 18,000mAh திறனை கொண்ட பேட்டரியுடன் வருகிறது. ஆதலால், இந்த போனில் அவ்வளவு சீக்கிரத்தில் சார்ஜ் போகாது. மேலும், தற்போது விற்கப்படும் அதிகபட்ச அளவிலான 5,000 mAh பேட்டரி திறனை இந்த ஸ்மார்ட் போன் முந்திவிட்டது. இந்த போன் வரும் ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது.