பாஸ்போர்ட் சேவா சார்பில் புதிய மொபைல் ஆப்..!
பாஸ்போர்ட் சேவா சார்பில் புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும்.
இத்துடன் ஏற்கனவே பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருந்தால், அதன் ஃபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். தபால் மூலம் அனுப்பப்பட்ட பாஸ்போர்ட் டெலிவரி சார்ந்த விவரங்களை இந்த செயலி மூலம் டிராக் செய்ய முடியும்.
பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மிக எளிமையாக மாற்றும் திட்டத்தின் முதல் படியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் செயலியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும். என ஆமதாபாத் வட்டார பாஸ்போர்ட் அலுவலர் நீலம் ரானி தெரிவித்தார்.
இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் ஏஜென்டுகள் மற்றும் தரகர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமின்றி நேரடியாக விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செயலியை கொண்டு பாஸ்போர்ட் சேவா கேந்ரா அல்லது வட்டார பாஸ்போர் மையத்தையும் தேட முடியும்.