யூடியூபில் வரலாற்றை மறைக்க உதவும் புதிய முறை..!

Published by
Dinasuvadu desk

நீங்க பார்த்த யூடியூப் வரலாற்றை மறைக்க உதவும் புதிய முறை: பரிசோதிக்கிறது யூடியூப் நீங்க பார்த்த யூடியூப் வரலாற்றை மறைக்க உதவும் புதிய முறை: பரிசோதிக்கிறது யூடியூப்

Image result for Incognito modeஆண்ட்ராய்டு மூலம் யூடியூப்-பை பயன்படுத்தும் சில பயனர்களுக்கு, சோதனை முயற்சியாக ஒரு ரகசிய அல்லது மறைவான முறைக்கான  Inconjinto mode(இன்கோஜ்னிட்டோ மோடு) தேர்வு அளிக்கப்பட்டு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த நவீன மாற்றத்தின் மூலம் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களின் வரிசை மூலம் யூடியூப் அப்ளிகேஷனை பயன்படுத்தும் போது, வழக்கமான வரலாறு பதிவு செய்யப்படும் செயல் தவிர்க்கப்பட்டு, பயனர்களுக்கான ஒரு ரகசியமான அனுபவத்தை அளிக்கிறது.

பிரபலமான எல்லா பிரவுஸர்களிலும் இந்த முறை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் நிலையில், தற்போது ஜிபோர்டும் இதை செயல்பாட்டில் கொண்டு வந்து உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஸ்விஃப்ட்கீ-யில் ஒரு மறைவான முறை உடன் கூடிய புதுப்பிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஓஎஸ்-க்கான கூகுள் அப்ளிகேஷனில், ஒரு தனிப்பட்ட இணைய தேடல் அனுபவத்தை அளிக்கும் இந்த முறை சேர்த்து கொள்ளப்பட்டது.

யூடியூப் கணக்கில் உள்நுழையாத வரை (சைன் இன்), எந்தொரு தேடல் வரலாறும் பதிவு செய்யப்படுவது இல்லை. இந்தப் புதிய மறைவான நிலையை பயன்படுத்துவதன் மூலம் உண்மையில் கணக்கில் இருந்து வெளியேறாமலே (சைன் அவுட்), எல்லா நடைமுறை நோக்கங்களின் பயன்பாட்டையும் செய்வது எளிதாகிறது. இதன்மூலம் நீங்கள் பார்ப்பது மற்றும் தேடல் வரலாற்றை இடைநிறுத்த முடியும் என்பதோடு, ஒரு பொத்தான் மீது கிளிக் செய்து மீண்டும் உள்நுழைய இயலும்.

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான யூடியூப் அப்ளிகேஷனில் மறைவான முறையை யூடியூப் அணியினர் பரிசோதித்து வருவதாக, ஆண்ட்ராய்டு போலீஸ் தெரிவித்துள்ளனர். சர்வர் பகுதியில் செய்யப்பட்ட ஒரு புதுப்பிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களால் செயல்பாட்டில் பார்க்கப்படுவது மற்றும் தேடல் வரலாற்றை முடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

யூடியூப் அப்ளிகேஷனின் மேற்பகுதியின் வலது முனையில் உள்ள உங்கள் உருவத்தை ஒரு முறை தட்டி, இந்த மறைவான முறையை இயக்கத்தில் (டேன் ஆன்) கொண்டு வர முடியும் என்று தெரிகிறது. இந்தத் தேர்வு, வெளியேறும் (சைன் அவுட்) தேர்வு இருக்கும் இடத்தில் இடம்பெற்று, பிறகு யூடியூப் கணக்கு தேர்விற்குள் செல்வது உடன் இணைந்து விடுகிறது. இந்த மறைவான முறையை இயக்கிய உடன், யூடியூப் அப்ளிகேஷனில் உள்ள அதுவரை இருந்த எல்லா அமர்வுகளின் செயல்பாடுகளும் நீக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள எல்லா சந்தாக்களும் மறைக்கப்படும். பணி அளிப்பவர், நிறுவனம் மற்றும் இணையதள சேவை அளிப்பவர் (ஐஎஸ்பி) என்று எந்தொரு பகுதியில் இருந்து வேண்டுமானாலும் உள்நுழைய முடியும். பயனர் உள்நுழையும் நெட்வர்க்கை பொறுத்து அது அமைகிறது

ஆண்ட்ராய்டு போலீஸ் வெளியிட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்களின் மூலம் பெரும்பாலான பிரவுஸர்களில் நாம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் யூடியூப் அப்ளிகேஷன் போலவே இந்த மறைவான முறையும் அமைந்து உள்ளதாகத் தெரிகிறது. மறைவான முறையில் இருக்கும் போது, ஏற்கனவே இருந்த உங்கள் உருவத்தை மாற்றி அமைத்து, நீங்கள் உள்நுழையாமல் மறைவான முறையைப் பயன்படுத்தி யூடியூப் உள்ளடக்கத்தை பார்ப்பதை சுட்டிக் காட்டுகிறது.

ஆனால் யூடியூப் அப்ளிகேஷனைக் கொண்ட எல்லா ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் மேற்கூறிய மறைவான முறை அளிக்கப்படுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் பார்ப்பதையும் தேடல் வரலாற்றையும் நிறுத்தி வைக்க ஏற்கனவே யூடியூப் ஒரு தேர்வை அளித்துள்ளது. இதை அணுக, அமைப்புகளுக்கு சென்று, அங்குள்ள வரலாறு & தனியுரிமை தேர்விற்கு சென்று இயக்க முடியும். இந்நிலையில் பயனருக்கு இதை எளிதாக கிடைக்கச் செய்யும் வகையில், இந்த நவீன அம்சம் அளிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு? மு.க.ஸ்டாலின் சூசக பதில்!

கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…

16 minutes ago

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிப்படுகொலை! நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி!

நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…

1 hour ago

அமெரிக்க யூடியூப்பருக்கு விருந்து வைத்த தமிழர்கள்… ஆங்கிலத்தில் கலக்கும் தமிழன்… வைரல் வீடியோ.!

சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…

2 hours ago

கோலி மட்டும் கேப்டன் இருந்தா அஸ்வின் ஓய்வு பெற்றிருக்க மாட்டார்! பாசித் அலி பேச்சு!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…

2 hours ago

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா மறைந்தார்!

ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…

3 hours ago

“ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது” – சபாநாயகர் அப்பாவு!

 சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…

3 hours ago