ஜெப்ரானிக்ஸ்-ல்(Zebronics) புதிய அறிமுகம்: பவர் பேங்குகள்(Power Bank)

Published by
Dinasuvadu desk

10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகளை ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்த பவர் பேங்குகள் ட்யூயல் வெளியீடு மற்றும் LED டார்ச் போன்ற அம்சங்களுடன் வருகின்றன.இதன்மூலம் பவர் பேங்க்கிலும் தனது புதிய பதிப்பை தொடங்கிவிட்டது இன் நிறுவனம். தகவல் தொடர்பு சாதனங்கள், ஆடியோ/ வீடியோ மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் முதலியவற்றில் ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகும். அவர்கள் தற்போது ZEB-PG10000D, ZEB-PG15000D, ZEB-PG20000D ஆகிய பவர் பேங்க் வரிசைகளை அறிமுகப்படுத்தி தங்களது தயாரிப்புகள் வரம்பை விரிவுபடுத்தி இருக்கின்றனர்.

இந்த பவர் பேங்குகள் அழகிய கருப்பு நிறப் பூச்சுடன் மேற்பகுதியில் கிராஃபிக் வடிவமைப்புடன் வருகின்றன. இவை LED டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் முறையே 10000 mAh, 150000 mAh மற்றும் 20000 mAh திறன்களைக் கொண்டிருக்கின்றன. இவை LED டார்ச் வசதியுடன் வருகின்றன, அத்துடன் உள்ளீட்டிற்கான ஒரு மைக்ரோ USB மற்றும் வெளியீட்டிற்கான இரண்டு USB போர்ட்டுகளும் கொண்டிருக்கின்றன. இந்த பவர் பேங்குகள் முறையே DC5V 2A உள்ளீடையும், DC5V 2A வெளியீடையும் ஆதரிப்பவை.  இந்த பவர் பேங்குகள் மூலம் உங்களது சாதனங்களுக்கு மிகத்துரிதமாக சார்ஜ் செய்ய இயலும்.

இண்டெலிஜண்ட் இன்ஃபர்மேடிவ் டிஜிட்டல் டிஸ்பிளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அது பவர் பேங்கில் எவ்வளவு சார்ஜ் மீதமுள்ளது என்பதை அறிந்து கொண்டு, உங்களது பவர் பேங்கை நீங்கள் எப்போது சார்ஜ் செய்யலாம் என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது. நீண்ட மற்றும் அல்ட்ரா ஸ்டைலான இந்த பவர் பேங்க் அழகியல் கெடாத வகையில் பணிச்சூழலுக்கு ஏற்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பவர் பேங்கின் அறிமுகத்தின் போது, ஜெப்ரானிக்ஸின் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி, ‘இன்றைய முழுமையான  செயல்பாட்டு உலகில், உங்களது சாதனங்களில் அதிக அம்சங்களின் தேவையும், உங்களது போனில் மல்டி டாஸ்கிங் செய்வதற்காக உயர் திறன் கொண்ட பவர் பேங்கின் தேவையும் அத்தியாவசியமாகும். எங்களது புதிய பவர் பேங்க் வரிசைகளைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுக்கு சார்ஜ் செய்து கவலையின்றி இருங்கள்’என தெரிவித்தார்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்த பவர் பேங்குகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டிருக்கின்றன. மேலும் இவை ஷார்ட் சர்க்யூட், உள்ளீடு/ வெளியீடு ஷார்ட், அதிக சார்ஜ் ஏறுதல் மற்றும் அதிக சார்ஜ் குறைதல் முதலிய சிக்கல்களில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
கறுப்பு நிறத்தில் கிடைக்கும், இந்த பவர் பேங்குகள் வரிசை இந்தியா முழுவதும் முன்னணி சில்லறை கடைகளில் கிடைக்கும்.

New introduction to Zebronics: Power Bank (Power Bank)

 

Recent Posts

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்! 

2030-ல் உலக கோப்பை… 30 லட்சம் நாய்களை கொல்ல மொராக்கோ அரசு ‘பகீர்’ திட்டம்!

ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…

7 hours ago

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் திடீர் தீ விபத்து!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…

8 hours ago

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

9 hours ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

10 hours ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

12 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

12 hours ago