ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறன் நீட்டிக்க புதிய கண்டுபிடிப்பு..!

Default Image

வெரிசோன் சிஇஓ(Verizon CEO), ஒரு தொழில்நுட்ப மாநாட்டில், எதிர்காலத்தில் வரவிருக்கும் 5ஜி தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆயுளில் ஒரு கடுமையான மாற்றத்தை (அதிகரிப்பை) கொண்டு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

5ஜி நெட்வொர்க்குகள் ஆனது தற்போதைய 4ஜி நெட்வொர்க்குகளை விட மிக வேகமான இணைய வேகத்தை வழங்குவது மட்டுமின்றி, குறைவான லேடன்சி மதிப்பையும் வழங்கும்.

. குறைவான லேடன்சி மதிப்பு என்றால், (5ஜி) பயனர்களால் மிக எளிமையாக டவர்களுடன் இணைய முடியும் என்று அர்த்தம். குறைந்த லேடன்சி மதிப்பானது, ஒரு ஸ்மார்ட்போனில் ஒரு சக்தி மாற்றத்தினை (ஸ்மார்ட்போனின் கம்யூட்டிங் ஆற்றல் – மொபைல் நெட்வெர்க் எட்ஜ்) ஏற்ப்படுத்தும், அது எதிர்காலத்தில் மெலிதான சாதனங்களை உருவாக்க வழிவகுக்கும், பின்னர் அது மகத்தான பேட்டரி ஆயுளுக்கு இடமளிக்கும்.

வெரிசோன் சிஇஓ மெக் ஆடமின் கருத்துப்படி, வேகமாக மற்றும் தடையற்ற டேட்டா ஸ்ட்ரீமிங் ஆனது கம்யூட்டிங் ஆற்றலை ஸ்மார்ட்போன்களின் நெட்வொர்க் முனைகளுக்கு மாற்ற உதவும். அது மிக மெல்லிய ஸ்மார்ட்போன்களை உருவாக்க வழிவகை செய்து பேட்டரி ஆயுளை வாரக்கணக்கில் நீட்டிக்க உதவும். இது 5ஜி மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார்.

சில கோட்பாடுகளின்படி, ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரியானது மிகபொறுமையாக குறையும் பட்சத்தில், அக்கருவியின் கம்ப்யூட்டிங் திறன்கள் பாதிக்கப்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்