ட்விட்டரில் வந்துவிட்டது புதிய வசதி.!
முன்னணி சமூக ஊடக சேவைகளில் ஒன்றான ட்விட்டர், குறும்பதிவுகளை புக்மார்க் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வசதி மூலம், பின்னர் பார்க்க விரும்பும் ஒரு குறும்பதிவை, புக்மார்க் செய்துகொள்ளலாம். குறும்பதிவைப் பகிரும் வசதியில் இந்த புக்மார்க்கிங் வசதியும் அமைந்துள்ளது.
இதற்கு முன்னர் ட்விட்டரில் ஒரு குறிப்பிட்ட குறும்பதிவைப் பின்னர் பார்க்க வேண்டுமெனில், அதை லைக் செய்ய வேண்டும். தற்போது புக்மார்க்கிங் வசதி மூலம் ட்விட்டர் இதைச் சீராக்கியுள்ளது. பயனாளி ஒருவர் புக்மார்க் செய்திருப்பது, அந்தக் குறும்பதிவை வெளியிட்டவருக்குத் தெரியாது.
New feature on Twitter