வந்துவிட்டது புதிய வசதி : ஜிமெயில்..!
ஜிமெயில் சேவையை, உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் வங்கி சார்ந்த பல்வேறு பணிகளுக்கு இந்த ஜிமெயில் சேவை மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அந்த அட்டகாசமான ஸ்மார்ட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஜிமெயில் சேவையில் எளிமையாக புகைப்படங்களை வைக்க வழிசெய்துள்ளது அந்நிறுவனம்.
குவிக் ரிமைன்டர்ஸ்: ஜிமெயில் சேவையில் இப்போது வழங்கப்பட்டுள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், உங்கள் வரும் முக்கியாமான மின்னஞ்சல்களுக்கு உடனே குவிக் ரிமைன்டர்ஸ் எனும் வசதியின் மூலம் பதில் அனுப்ப முடியும். மேலும் அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக தேவையில்லாத மற்றும் ஆபத்து நிரைந்த மின்னஞ்சல் வரும் போது எச்சரிக்கை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கான்ஃபிடென்ஷியல் மோட் : அடுத்து ஜிமெயில் சேவையில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் எனும் வசதி ஆனது மின்னஞ்சல்களை டவுன்லோடு, ஃபார்வேர்டு, காப்பி அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும் என கூகுள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மின்னஞ்சல் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் சேவையில் வழங்கப்படுகிறது. மேலும் விரைவில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய வசதிகளை பெற ஜிமெயில் செட்டிங்ஸ் பகுதியில் டிரை தி நியூ ஜிமெயில் எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு எளிமைய புதிய அப்டேட் வசதிகளை பெற முடியும்.