தனிமை உலகிற்கு டிஜிட்டல் காண்டம்.! இனி ‘அதற்கும்’ பாதுகாப்பு ஆப்.? விவரம் இதோ.., 

தனிமையில் நெருக்கமாக இருக்கும் போது ஸ்மார்ட் போன் செயலி மூலம் நடைபெறும் ஊடுருவலை தடுக்க புதிய Comdom எனும் டிஜிட்டல் காண்டம் செயலி ஜெர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Comdom App - Digital Condom

ஜெர்மனி : தற்போதைய ஸ்மார்ட் உலகில் , நாம் பாதுகாப்பானது என நினைத்து செல்போன் வாயிலாகவும், செல்போன் வைத்து கொண்டு அருகில் உள்ளவர்களிடம் நேரடியாக பேசினால் கூட சில சமயங்களில் நமது பேச்சுக்கள் செல்போன் மைக்ரோபோன் வழியாக ஒட்டுகேட்கப்படுகிறது. இதன் மூலம் பல சமயம் நாம் பேசிக்கொண்ட விஷயம் நாம் தேடும் சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரமாக வந்து சேர்வதை கவனித்திருபோம்.

சில சமயங்களில் செல்போன் கேமிராக்கள் கூட சில செயலிகள் மூலம் தவறாக கையாளப்படுகின்றன. இப்படி பாதுகாப்பற்ற சூழல் நிலவும் ஸ்மார்ட் யுகத்தில் இருந்து விலகி இருக்கவும், அதில் இருந்து தனிப்பட்ட விஷயங்களை பாதுகாக்கவும் ஜெர்மனி நிறுவனம் புதிய ஆப்-ஐ உருவாகியுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த பில்லி பாய் (Blly Boy) எனும் நிறுவனம் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனம், தனிப்பட்ட இருவர் (ஜோடி) நெருக்கமாக இருக்கும் போது அவர்களது தனிப்பட்ட அந்தரங்க விஷயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

அதாவது, இந்த ஆப்-பின் பெயரே Comdom எனும் டிஜிட்டல் காண்டம் (ஆணுறை) என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆன் செய்துவிட்டால் குறிப்பிட்ட அந்த ஸ்மார்ட் போனில் கேமிரா ,  மைக்ரோபோன் செயல்பாடுகள் முழுதாக தடுக்கப்படும்.  ப்ளூடூத் ஆப்  மூலம் செயல்பட்டு வேறு யாரேனும் அந்த ஸ்மார்ட் போனில் ஊடுருவி வீடியோ எடுக்க முயன்றால் உடனடியாக அலாரம் அடித்துவிடும்படியும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் இந்த செயலியை உருவாக்கியவர்கள்.

இந்த செயலியானது தற்போது 30 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலியை உபயோகிப்பதன் மூலம் , ஜோடிகள் தனிமையில் இருக்கும் போது யாரும் அவர்களது போன் கேமிராவை, மைக்ரோபோனை ஊடுருவி அதிலிருந்து வீடியோ ரெகார்ட் செய்து விடுவார்களோ என்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் நிறுவனம் உறுதியளிக்கிறது. அதனால் தான் இதனை டிஜிட்டல் உலகின் காண்டம் என செல்லமாக அழைக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்