53 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலவில் இருக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால்தடம்!!
சந்திரனில் மனிதன் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பது மனித வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக எப்போதும் கருதப்படும்.
ஜூலை 20, 1969 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்தடம் பதித்த முதல் நபர் ஆனார். இந்த நிகழ்வின் 53 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நாசா ஒரு வீடியோவை வெளியிட்டது.
ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் மனித வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதித்து ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டன, ஆனால் அவர்களின் தடம் இன்னும் உள்ளது. இதற்கு நிலவில் வளிமண்டலம் இல்லாததே முக்கிய காரணம், அதாவது கால்தடங்களை அழிக்க காற்றோ மழையோ இல்லை.
ஜூலை 20 ‘சர்வதேச நிலவு தினம்’ என்று கொண்டாடப்படுகிறது. ஜூலை 20, 1969 முதல் இப்போது வரை, அமெரிக்காவில் இருந்து மொத்தம் ஆறு குழுவினர் சந்திரனுக்கு பயணம் செய்துள்ளனர்.
இது 1969 அப்பல்லோ 11 இல் தொடங்கி 1972 அப்பல்லோ 17 இல் முடிந்தது. யூஜின் செர்னன் மற்றும் ஹாரிசன் ஷ்மிட் ஆகியோர் சந்திரனில் கடைசியாக கால்தடம் பதித்தனர்.