யூடியூப்பிற்கு போட்டியாக மஸ்க்கின் பிரத்யேக டிவி ஆப்… உறுதிப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரி!

Published by
பாலா கலியமூர்த்தி

X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைத்தளம் யூடியூப்க்குப் போட்டியாக டிவி ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த டிவி ஆப் தற்போது பல்வேறு கட்ட சோதனையில் இருந்து வருவதாகவும், முதற்கட்டமாக ஸ்மார்ட் டிவிகளுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த டிவி ஆப்பானது நீண்ட நேரம் உள்ள வீடியோக்களை பார்க்கும் வகையில் உருவாகி வருவதாகவும் கூறப்பட்டது.

அதன்படி, இந்த எக்ஸ் டிவி ஆப் முதலில் Fire OS (Amazon) மற்றும் Tizen OS (Samsung) ஆகியவற்றில் இயங்கும் ஸ்மார்ட் டிவிகளுக்கு கிடைக்கும் என்றும் பின்னர் மற்ற தளங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த பிரத்தியேக எக்ஸ் டிவி  செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் சமீபத்தில் எலான் மாஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும் அறிவித்திருந்தார்.

எனவே எக்ஸ் டிவி செயலியானது யூடியூப் போன்று வடிவமைப்பை கொண்டுள்ளது. இதனால் யூடியூப்பிற்கு போட்டியாக எக்ஸ் டிவி செயலி இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், எக்ஸ் வலைத்தளம் உருவாக்கி வரும் பிரத்யேக டிவி செயலியானது யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் இருக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிறிய திரையில் இருந்து பெரிய திரை வரை உள்ள அனைத்தையும் எக்ஸ் மாற்றிக் கொண்டிருக்கிறது. விரைவில் நாங்கள் X TV செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட் டிவிகளில் உள்ளடக்கத்தை நிகழ்நேரத்தில் கொண்டு வருவோம்.

இந்த X TV செயலியானது பெரிய ஸ்க்ரீனில் உயர்தர மற்றும் அதிவேக பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும். இதனால் X TV செயலியை இன்னும் மேம்படுத்தலுடன் நாங்கள் உருவாக்கி வருகிறோம். ஆனால் நீங்கள் எதிர்பார்க்கக் கூடியவற்றின் ஸ்னீக் பீக் இங்கு உள்ளது என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரது பதிவில் டிரெண்டிங் வீடியோ அல்காரிதம், AI டெக்னலாஜி, மேம்படுத்தப்பட்ட வீடியோ தேடல், விரைவாக கண்டறியும் வசதி, எளிமையான கேஸ்டிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதை குறிப்பிட்டு, இந்த செயலி குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நாங்கள் எங்கள் எக்ஸ் வலைதள பயனர்களுக்காக இதனை உருவாக்கி வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

SAvAFG : இறுதி வரை போராடிய ரஹ்மத் ஷா! வெற்றியை தட்டி தூக்கிய தென் ஆப்பிரிக்கா!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின.  இந்தப் போட்டி…

3 hours ago

“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்

கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …

5 hours ago

“கடலூருக்கு அசத்தலான 10 முக்கிய அறிவிப்புகள்..,” லிஸ்ட் போட்ட முதலமைச்சர்!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …

6 hours ago

“நல்ல கருத்து சொல்ற படம்” மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி! கண்கலங்கிய பிரதீப்.!

சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…

7 hours ago

SAvAFG : நிலைத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா! ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 316 டார்கெட்!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.  இந்தப் போட்டி…

7 hours ago

ஆதாரமற்ற குற்றச்சாட்டால் சொத்துக்கள் முடக்கம்: ‘மேல்முறையீடு செய்வேன்’ – ஷங்கர் முழக்கம்.!

சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…

7 hours ago