இஸ்ரோ ராக்கெட் தெரியும்..! பிரவுசர்ல ராக்கெட் விட்டுருக்காங்க… இது தெரியுமா உங்களுக்கு..!

Default Image

தொழிற்நுட்ப வளர்ச்சி உண்மையில் விண்ணை தொட்டு விட்டது. சில நூற்றாண்டாக உலகில் நடந்து வரும் பல வித அறிவியல் மாற்றங்களே இதற்கு சிறந்த சான்றாக அமையும். எல்லா துறையிலும் அறிவியலின் பங்கீடு மிக இன்றையமையாததாகும். இன்றைய கால கட்டத்தில் அறிவியல் இல்லையேல் எதுவுமே இயங்காது என்கிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வளவு அறிவியல் மாற்றங்கள் நம்மை சுற்றி நடந்தாலும் ஒரு சில தொழிற்நுட்பங்களே நம்மை அண்ணார்ந்து பார்க்க வைக்கிறது. அதில் ஒன்று தான் தற்போது வெளியாகியுள்ள பயர்பாக்ஸ் ராக்கெட் பிரவுசர். இஸ்ரோ விடும் ராக்கெட் பற்றி தெரிந்த நமக்கு இந்த ராக்கெட் பற்றி தெரிவதில்லை. இனி இதன் முழு செயல்பாட்டையும் அறிந்து கொள்வோம்.

மொசில்லா
பலவித பிரவுசர்கள் இருந்தாலும் மொசில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசரை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். காரணம், மற்றவற்றை காட்டிலும் இதன் திறன் மற்றும் நம்பக தன்மை உயர்ந்த அளவில் இருப்பது தான். உங்களின் அந்தரங்க தகவலை மற்ற பிரவுசர்கள் திருடுவது போல பயர்பாக்ஸ் திருடுவதில்லை. இதனால் தான் பல ஆண்டுகளாக மொசில்லா முதன்மையான இடத்தில் உள்ளது.

புது ரிலீஸ்
மொசில்லா பயர்பாக்ஸ் பல வெர்சன் பிரௌசர்களை இதுவரை வெளியிட்டுள்ளது. ஆனால், இவை எல்லாவற்றை காட்டிலும் தனித்துவம் கொண்டதாக, தற்போது ரிலீசாகிய “பயர்பாக்ஸ் ராக்கெட்” (firefox rocket) உள்ளது. இதன் அதி வேகமான தன்மையால் தான் இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்
இது மற்ற பிரவுசர்களை விட மிக குறைவான ஸ்டோரேஜ் கொண்டது. கிட்டத்தட்ட lite வகை ஆப்ஸ்களை சேர்ந்தது. குறைந்த அளவிலே இது உங்களின் டேட்டாவை எடுத்து கொள்ளும். அதே நேரத்தில் இதன் வேகம் ராக்கெட் போன்று இருக்கும். இதை இந்தோனேஷியாவில் கடந்து ஆண்டு அறிமுகம் படுத்தினர். அதே போன்று இந்தியாவிலும் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது. இதை தரவிறக்கம் செய்ய…இந்த லிங்க்கை பயன்படுத்தி கொள்ளவும்.
https://support.mozilla.org/en-US/products/firefox-rocket/get-started

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்