மொஸில்லா பையர்பாக்ஸ்(Mozilla Firefox’s)-இன் புதிய படைப்பு .!

Default Image

மொஸில்லா நிறுவனம், முன்னணி இணையத்தள உலாவிகளுள் ஒன்றான பையர்பாக்ஸின் புதிய பதிப்பினை  அறிமுகம் செய்யவுள்ளது.

Firefox Quantum என அழைக்கப்படும் இப் பதிப்பானது 59வது பதிப்பாக காணப்படுகின்றது. இதில் பயனர்களுக்கான பாதுகாப்பு  மேம்படுத்தப்பட்டுள்ளது.

தவிர இணையப்பக்கங்கள் தரவிறக்கப்படும் வேகம் முன்னைய பதிப்புக்களை விடவும் அதிகமாக இருக்கின்றது. மேலும் அமேஷானின் Fire TV வசதி, நீண்ட இணையத்தள முகவரிகளை பயன்படுத்தாது குறுகிய சொற்களின் ஊடாக இணையப் பக்கங்களுக்குள் பிரவேசித்தல் போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப் பதிப்பானது டெக்ஸ்டாப் கணினிகளுக்கு மாத்திரமன்றி, iOS மற்றும் Android சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.

Mozilla Firefox’s new creation!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்