மோட்டோவின் மடக்கக்கூடிய ‘ரேசர் 40 அல்ட்ரா’ ஸ்மார்ட்போன்..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!
மோட்டோரோலா (Motorola) அதன் ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனை (Razr 40 Ultra) இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா (Motorola), ஒவ்வொரு முறையும் புதிய அம்சங்களுடன் அட்டகாசமான மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மோட்டோ அதன் மடக்கக்கூடிய ரேசர் 40 அல்ட்ரா (Razr 40 Ultra) ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
மோட்டோரோலா சமீபத்தில், மோட்டோரோலா ரேசர் 40 (Motorola Razr 40) மற்றும் ரேசர் 40 அல்ட்ராவை (Motorola Razr 40 Ultra) சீனாவில் அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுகத்திற்கு பிறகு, ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று நிறுவனம் தெரிவித்தது. இது மிகப்பெரிய டிஸ்ப்ளே மற்றும் மெலிதான மடக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.
மேலும், இந்தியாவில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்படும் என்று மோட்டோரோலா தெரிவித்துள்ளது. இப்பொழுது, இந்த ஸ்மார்ட்போனில் வரவிருக்கும் அம்சங்களை கீழே காணலாம்.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா டிஸ்பிளே:
இந்த ரேசர் 40 அல்ட்ரா ஆனது 1080 x 2640 பிக்சல்கள் கொண்ட 6.9 இன்ச் அளவுள்ள FHD+ pOLED மெயின் டிஸ்பிளேயுடன் வரவுள்ளது. இந்த டிஸ்பிளே 165Hz ரெபிரெஷிங் ரேட், 1400 Nits உச்சகட்ட பிரகாசம் (Brightness) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் 144Hz ரெபிரெஷிங் ரேட்டுடன் கூடிய 3.6-இன்ச் pOLED டிஸ்பிளேவை அதன் வெளிப்புறத்தில் கொண்டுள்ளது.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா பிராசஸர்:
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) பிராசஸர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Moto MyUX அமைப்பைக் கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு வேகமாக இருக்கும்.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா கேமரா:
ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பின்புறத்தில் LED ஃப்ளாஷுடன் கூடிய 12 எம்பி வைட் ஆங்கிள் பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா கொண்ட அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 எம்பி வைட் ஆங்கிள் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த கேமரா அமைப்பினால் அதிக தெளிவுடன் கூடிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யலாம்.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா பேட்டரி:
மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் 5W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போனை இரண்டு முறைகளில் சார்ஜ் செய்ய முடியும்.
மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா நினைவகம் மற்றும் விலை:
இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி, 8ஜிபி ரேம் + 256ஜிபி நினைவகம் மற்றும் 12ஜிபி ரேம் + 512 நினைவகங்களுடன் விவா மெஜந்தா, இன்ஃபினைட் பிளாக், க்லேசியர் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.66,000 என்ற விலையில் ஜூன் 30ம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.