மீண்டும் வருகிறது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் …!!! மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…!!! எதிர்நோக்கி காத்திருக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்கள்..!!!
ஸ்மார்ட் போன் உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபல மொபைல்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் தற்போது மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது.இந்த ரக மடிக்கக்கூடிய மோட்டோ மொபைல் போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும் அடுத்த மாதம் விற்பனை துவங்கும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை $1600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,12,000) வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிய ரேசர் போனின் விலை 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,07,107) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த பிப்ரவரி 2018 இல் லெனோவோ தலைமை செயல் அதிகாரி ரேசர் போன் புதிய வெர்ஷனின் டீசரை வெளியிட்டிருந்தார். பின் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அந்நிறுவனம் பதிவு செய்திருந்த சில காப்புரிமைகளில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் வெளியாகலாம் என கூறப்பட்டது.
சி.இ.எஸ். 2019 விழாவில் சீன நிறுவனமான ராயல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.இதற்கு முன்னதாக 2018 ஆக்டோபரில் ஃபிளெக்ஸ்பை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் மடிக்கும் தன்மை கொண்ட [AMOLED]டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டிருக்கிறது.இந்த போனில் இருவித மெமரி ஆப்ஷன்கள், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் வாட்டர் ஓ.எஸ். யு.ஐ. கொண்டிருக்கிறது. 7.8 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஃபிளெக்ஸ்பை ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. மற்றும் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.இதனால் ஸ்மார்ட் போன் ஆர்வலர்கள் இந்த மடிக்கும் ஸ்மார்ட் போனை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.
DINASUVADU.