அதிரடி ஆஃபரில்…3டி டிஸ்பிளே, வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்…கலக்கும் மோட்டோரோலா.!

Motorola Edge 50 Pro

Motorola Edge 50 Pro: மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) இன்று இந்தியாவில் Flipkart மற்றும் Motorola-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் நியாமான விலையில், அதிரடி ஆஃபருடன் இந்தியாவில் இன்று முதல் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. எட்ஜ் 50 ப்ரோவின் விலையைப் பொறுத்தவரை, விவோ v30 மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.


ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய சாதனங்களை மாற்றிக் கொண்டு கைபேசியை வாங்கினால் ரூ.2,000 எனவும், HDFC -பேங்க் க்ரெடிட் கார்டைப் பயன்படுத்தி முழு பரிவர்த்தனைகளுக்கு 2,000 உடனடி தள்ளுபடி ஆஃபரிலும் கிடைக்கிறது.

முக்கிய அம்சங்கள்:

  • 6.7 இன்ச் pOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 1.5K ரெசொலூஷன் கொண்ட 3டி கர்வ்ட் டிஸ்பிளே ஆகும்.
  • ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4என்எம் சிப்செட் கொண்டுள்ளது.
  • ஒன்று 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் மற்றொன்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
  • முன்புறத்தில், ஆட்டோஃபோக்கஸுடன் 50 எம்பி செல்ஃபி கேமராவும், பின் புறத்தில் 13 எம்பி அல்ட்ராவைடு மேக்ரோ விஷன் கேமராவும் கிடைக்கிறது.
  • Motorola Edge 50 Pro ஆனது லஸ் லெவென்டர் (Luxe Lavender) பிளாக் பியூட்டி (Black Beauty) மற்றும் மூன் லைட் பியரல் (Moonlight Pearl) ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
  • பிரீமியம் மிட்-ரேஞ்ச் 125W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் இந்த போன் 4500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

விலை மற்றும் தள்ளுபடி

8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.31,999-க்கும், 8 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.35,999க்கும் விற்பனைக்கு வந்தள்ளது.

இதில், Flipkart மற்றும் Motorola ஆகிய இரு தளங்களில் எச்டிஎப்சி கிரெடிட் கார்ட் மூலமாக வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி ஆஃபரில் 8 ஜிபி ரேம் மாடலை வெறும் 27,999 ரூபாய்க்கு  பெற்று கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்