மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது.
ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் ‘எக்ஸ்டி1925-7″ என்ற குறியீட்டு பெயரிலும், அதன்பின்பு மோட்டோ இ5 ‘எக்ஸ்டி1924-3″ என்ற குறியீட்டு பெயரிலும் உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இவை இந்தோனேஷியாவில் சான்றளிக்கும் வலைதளத்தில் கசிந்துள்ளது. மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
மேலும் மோட்டோ மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகித அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 5.8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…