இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது.
உலகில் உள்ள பல மில்லியன் மக்களால் செய்தி அனுப்புவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்பட கூடிய செயலிகளில் ஒன்றுதான் வாட்ஸ்அப். தற்பொழுது மெட்டாவிற்கு சொந்தமான இந்த வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான தவறான கணக்குகளை தடை செய்து உள்ளது.
சமீபத்தில், ஜிபி வாட்ஸ்அப் போன்ற போலியான வாட்ஸ்அப்களை பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த மே 1 முதல் மே 31 வரை மொத்தம் 6,508,000 வாட்ஸ்அப் கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கீழ் இணங்கி, அதன் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்த கணக்குகளில், 24 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள், பயனர்களிடமிருந்து புகார்கள் வருவதற்கு முன்பே, முன்கூட்டியே தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப், ஏப்ரல் மாதத்தில் 74 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…