170 மில்லியனுக்கும் அதிகமான Reviews-களை நீக்கிய கூகுள்
கூகுள் நிறுவனமானது தனது தேடல் மற்றும் மேப்பில் இருந்து 170 மில்லியனுக்கும் அதிகமான Reviews-களை நீக்கியுள்ளது. நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதால் தனது புதிய மெஷின் லர்னிங் (machine learning) Algorithm மூலம் இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளது.
மேலும் 12 மில்லியனுக்கும் அதிகமான போலி வணிக சுயவிவரங்களையும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பிளாக் செய்துள்ளது. இது குறித்து கூடுதலாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேடல் மற்றும் மேப்பில் இருந்து 170 மில்லியனுக்கும் அதிகமான Reviews-களை நீக்கியுள்ளோம்.
பக்கவா இருக்கே! லீக்கான ‘Xiaomi 14 Ultra’ போனின் டிசைன்!
கடந்த ஆண்டு, கேள்விக்குரிய மறுஆய்வு முறைகளை இன்னும் வேகமாகக் கண்டறியும் புதிய மெஷின் லர்னிங் வழிமுறையை விரிவாக அறிமுகப்படுத்தினோம். அதே போல வீடியோ Algorithm-ல் செய்யப்பட்ட மேம்பாடுகள் மூலம் போலியான தொலைபேசி எண்களை கண்டறிந்ததோடு விதிமுறைகளை மீறிய 14 மில்லியன் வீடியோக்கள் நீக்கப்பட்டதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.