ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை பயன்படுத்தி பல வழி தெரியாத இடங்களுக்கு சென்று வருவோம். அது சில நேரங்களில் சரியாக வழியை காட்டினாலும், சில நேரங்களில் நமக்கு தலை வலி உண்டாக்கும் அளவிற்கு மாறி இருக்கிறது. தற்போது அந்த கூகுள் மேப்ஸ்க்கு ஆப்பு வைக்க தற்போது ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளனர்.
இந்த புவன் இணையத்தளம், கூகுள் மேப்ஸ் செயலியை விட 10 மடங்கு மிக துல்லியமாகவும், அதிக விவரங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளம் இந்திய அறிவியல் பயணத்தில் மைல்கல்லாக அமையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த புவன் இணையத்தளம் விவசாயம், கிராமப்புற மேம்பாடு, பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் முக்கிய பங்காற்றும் என்றும் விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் :
தனிநபர் தகவல் பாதுகாப்பு
தனிநபர் தகவல் குறித்து சர்ச்சையில் சிக்கி வரும் கூகுள் மேப்ஸ்ஸை போல இல்லாமல் புவன் தனிநபர் தகவல்களை (Private Data) பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் தனிநபர் விவரங்கள் விளம்பரங்களுக்காகவோ அல்லது அதனை விற்கவோ அல்லது வேறு ஒருவரால் உபயோகப்படுத்தப்படவோ முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
துல்லியமான தகவல்கள்
புவனின் நிலப்பரப்பு தரவுகள் எல்லாம் மற்ற செயலிகளை காட்டிலும் அதிக துல்லியத்தோடு
இருக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் 3 கோடி முக்கிய இடங்கள், 7.5 லட்சம் கிராமங்கள், மற்றும் 7,500 நகரங்கள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இதுவரை எந்தவொரு செயலியும் வழங்கிட முடியாத துல்லியத்தை புவன் வழங்கிடும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி நிலப்பரப்பு மேம்பாடு திட்டங்கள் மற்றும் வனப்பரப்பு விவரங்கள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களும் இச்செயலியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…