கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

Bhuvan Portal

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை பயன்படுத்தி பல வழி தெரியாத இடங்களுக்கு சென்று வருவோம். அது சில நேரங்களில் சரியாக வழியை காட்டினாலும், சில நேரங்களில் நமக்கு தலை வலி உண்டாக்கும் அளவிற்கு மாறி இருக்கிறது. தற்போது அந்த கூகுள் மேப்ஸ்க்கு ஆப்பு வைக்க தற்போது ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை இஸ்ரோ உருவாக்கி உள்ளனர்.

இந்த புவன் இணையத்தளம், கூகுள் மேப்ஸ் செயலியை விட 10 மடங்கு மிக துல்லியமாகவும், அதிக விவரங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளம் இந்திய அறிவியல் பயணத்தில் மைல்கல்லாக அமையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த புவன் இணையத்தளம் விவசாயம், கிராமப்புற மேம்பாடு, பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் முக்கிய பங்காற்றும் என்றும் விஞ்ஞானிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள் :

தனிநபர் தகவல் பாதுகாப்பு

தனிநபர் தகவல் குறித்து சர்ச்சையில் சிக்கி வரும் கூகுள் மேப்ஸ்ஸை போல இல்லாமல் புவன் தனிநபர்  தகவல்களை (Private Data) பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் தனிநபர் விவரங்கள் விளம்பரங்களுக்காகவோ அல்லது அதனை விற்கவோ அல்லது வேறு ஒருவரால் உபயோகப்படுத்தப்படவோ முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

துல்லியமான தகவல்கள்

புவனின் நிலப்பரப்பு தரவுகள் எல்லாம் மற்ற செயலிகளை காட்டிலும் அதிக துல்லியத்தோடு
இருக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் 3 கோடி முக்கிய இடங்கள்,  7.5 லட்சம் கிராமங்கள், மற்றும் 7,500 நகரங்கள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இதுவரை எந்தவொரு செயலியும் வழங்கிட முடியாத துல்லியத்தை புவன் வழங்கிடும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி நிலப்பரப்பு மேம்பாடு திட்டங்கள் மற்றும் வனப்பரப்பு விவரங்கள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களும் இச்செயலியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்