கேமிங்கின் மான்ஸ்டர்..32 ஜிபி ரேம்..இன்டெல் ஐ9 பிராசஸர்.! அதிரடி காட்டும் லெனோவா.!

Lenovo Y9000K 2023

Lenovo Y9000K 2023: கேமிங் கன்சோல்கள், கேமிங் மானிட்டர்கள் மற்றும் கேமிங் லேப்டாப் தயாரிப்பாளரான லெனோவா, அதன் புதிய கேமிங் லேப்டாப்பான லெனோவா ஒய்9000கே 2023 (Lenovo Y9000K 2023) -ஐ சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த லேப்டாப்பை ஒரு மாதத்திற்கு முன்னதாக உலக அளவில் லெனோவா அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து நாளை அக்டோபர் 23ம் தேதி சீனாவில் வெளியிட உள்ளது. இதனை லெனோவா தனது அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கில் அறிவித்துள்ளது.

டிஸ்பிளே

இந்த லேப்டாப்பில் 3200 x 2000 பிக்சல்கள் ஹைரெசல்யூஷன் கொண்ட 16 இன்ச் மினி எல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் பிரைட்னஸைக் கொண்டுள்ளது. இது ஒரு கேமிங் லேப்டாப் என்பதால், இந்த டிஸ்பிளே நல்ல அனுபவத்தை பயனருக்கு வழங்கும். லேப்டாப்பில் உள்ள கீபோர்டில் ஆர்ஜிபி பேக் லைட் பொருத்தப்பட்டுள்ளன.

பிராசஸர்

லெனோவா ஒய்9000கே லேப்டாப் இன்டெல் கோர் ஐ9-13980எச்எக்ஸ் (Intel Core i9-13980HX) பிராசஸர் மூலம் இயங்குகிறது. இதில் என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 4090 கிராபிக்ஸ் உள்ளது.

இதில் பொருத்தப்பட்டுள்ள திரவ குளிரூட்டும் அமைப்பு லேப்டாப்பை நல்ல பெர்ஃபார்மன்ஸை வழங்க அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளிரூட்டும் அமைப்பு ஒரு சிறிய பம்பைப் பயன்படுத்தி, குழாய்களின் மூலம் தண்ணீரை லேப்டாப் முழுவதும் அனுப்பி வெப்பத்தை வெளியேற்றுகிறது.

பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ் 

2.56 கிலோ எடை மற்றும் 22.7 மிமீ தடிமன் கொண்ட இந்த லேப்டாப்பின் பேட்டரி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதில் யுஎஸ்பி டைப்-சி போர்ட், மெமரி கார்டு ஸ்லாட் மற்றும் தண்டர்போல்ட் 4 உள்ளது. அதோடு 32 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 2 டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் உள்ளது.

விலை

இந்த லெனோவா ஒய்9000கே 2023 கேமிங் லேப்டாப் நாளை சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் அறிமுகமாகும் இந்த லெனோவா ஒய்9000கே 2023 லேப்டாப் 4499 யூரோக்கள் (கிட்டத்தட்ட ரூ.3,97,133) என்ற விலையில் விற்பனை செய்யப்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்