செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோய், மனநிலை பாதிப்பு மற்றும் ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மையுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன்கள் அதிகளவு கதிர்வீச்சை வெளிபடுத்தக் கூடியதாக உள்ளதால் அவற்றை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவது கவலை அளிக்கும் வகையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக சி.டி.பி.ஹச் இயக்குனர் டாக்டர் கரேன் ஸ்மித் கூறியுள்ளார்.
செல்போன்களால் புற்றுநோய் கட்டிகள் வருகிறதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உருவாக்கப்பட்ட 2009 CDPH ஆவணத்தை வெளியிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை அடுத்து, தற்போது ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செல்போன்களை அதிகநேரம் பயன்படுத்துவதால், கதிர்வீச்சு பாதிப்பால் உடல்நலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது தெரியவந்துள்ளது.
2009 CDPH ஆய்வின் பரிந்துரைகள் :
பொதுமக்கள் தங்களின் கைபேசியை பாக்கெட்டிகளில் வைத்திருக்கக் கூடாது.
நீண்ட நேரமாக தங்களின் காதுக்களில் வைத்திருக்கக்கூடாது.
தூங்கும் போது கைபேசியினை பட்டுக்கையில் வைத்து கொண்டே தூங்குவது மிகவும் ஆபத்தானது.
வெறும் 2 புள்ளிகளோ அதற்கும் குறைவாகவோ சிக்னல் இருந்தால் செல்போன்களை பயன்படுத்துவதை முடிந்தளவு குறைத்துக் கொள்ள வேண்டும்
அதிவேகத்தில் செல்லும்போது சிக்னலை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக செல்போன்கள் அதிக கதிர்வீச்சை வெளியிடுவதால், பயணங்களின்போது செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.
செல்போன்களை பாக்கெட்களில் வைப்பதற்கு பதிலாக, பைகளில் வைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ள சிடிபிஹெச்(CDPH), முடிந்தவரை தலையணி (Headphone) பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
உடலில் பல பிரச்சனைக்களை உண்டாக்கும் கருவியாக கைபேசி மாறிவருகின்றது.
கைபேசியை குறைவாக பயன்படுத்துவது நல்லது என சி.டி.பி.ஹச் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெரியவர்களைவிட, வளரும் குழந்தைகளின் மூளையில் கதிர்வீச்சு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் குழந்தைகளிடம் செல்போன்களை கொடுப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் (இரவு 7.30 மணிக்குள்) புயலாக…
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக்…
சென்னை : வங்கக்கடலில் புயலாக உருவெடுக்க உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 27] எபிசோடில் மீனாவை துரத்தும் நபர் ,பதட்டத்தில் வித்யா வீட்டுக்குள் செல்லும் மீனா..…
டெல்லி : அதானி குழுமம் மீதும் கெளதம் அதானி மீதும் அமெரிக்க வழக்கறிஞர் குழு குற்றசாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முன்பு திரைத்துறையில்…