கேமராவில் சிக்காத அதிசய உடை.! சீன மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.!
சீன மாணவர்கள் பாதுகாப்பு கேமராக்களிலிருந்து மனித உடலை மறைக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஆடையை உருவாக்குவதாக கூறியுள்ளனர்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பு கேமராக்களில் இருந்து மனித உடலை மறைக்கும் உடையை சீன மாணவர்கள் கண்டுபிடிக்க போவதாக கூறியுள்ளனர். “இன்விஸ் டிஃபென்ஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த உடையானது, பகல் நேரங்களில் கேமராவை குழப்புவதற்காக கோட் வடிவிலும், இரவு நேரங்களில் AI மானிட்டரை குழப்புவதற்காக ஒரு வகை வெப்ப நிலையை வெளிவிடுகிறது.
இது பற்றி மாணவர்கள் கூறுகையில், “இந்த இன்விஸ் டிஃபென்ஸ் உடையணிந்தவர்களை கேமரா படம் பிடித்துவிடும். ஆனால் அதன் மூலம் இந்த உடை அணிந்தவர் மனிதரா அல்லது எந்திரமா என்று கண்டுபிடிக்க முடியாது” என் தெரிவித்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்ட ஒரு உடையைத் தயாரிப்பதற்கு 500 யுவான் (இந்திய ரூபாயில் 5,905) மட்டுமே செலவாகும், என மாணவர்கள்மதிப்பிட்டுள்ளனர்.
இந்த உடையானது ட்ரோன்கேமராவில் தெரியாது, மேலும் இராணுவ பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று மாணவர்க்குழு பேராசிரியர் வாங் ஜெங் கூறினார்.