Surface Laptop Go 3: அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் அதன் சர்ஃபேஸ் சீரிஸில் புதிய சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3 எனப்படும் சிறிய லேப்டாப்பை, கடந்த மாதம் நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வில் அறிவித்தது. தற்போது அக்டோபர் 19ம் தேதியான இன்று இந்த சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3-யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
டிஸ்பிளே
சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3 -யில் 1536 x 1024 ரெசல்யூஷன் மற்றும் 10 பாயிண்ட் மல்டி டச் கொண்ட 12.4 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்பிளே உள்ளது. இந்த டிஸ்பிளேவின் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 உள்ளது. இதில் டால்பிஃபுட்நோட் ஆடியோஃபுட்நோட் பிரீமியம் கொண்ட ஓம்னிசோனிக் ஃபுட்நோட் ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் ஸ்டுடியோ மைக்குகள், வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.1 இணைப்பு உள்ளது.
பிராசஸர்
இந்த லேப்டாப் 12வது ஜென் இன்டெல்ஃபுட்நோட் கோர்ஃபுட்நோட் ஐ5-1235யு பிராசஸர் மூலம் இயங்குகிறது. இதில் இன்டெல்ஃபுட்நோட் ஐரிஸ் ஃபுட்நோட் எக்ஸ்இ கிராபிக்ஸ் உள்ளது. இதில் விண்டோஸ் 11 ஹோம் ஓஎஸ், ப்ரீ லோடெட் மைக்ரோசாப்ட் 360 ஆப்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட் 30 நாள் ட்ரையலுடன் வருகிறது.
பேட்டரி
1.13 கிலோ எடை கொண்ட இந்த சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3-யில் 15 மணிநேரம் வரை செயலில் இருக்கக்கூடிய திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய 35 வாட்ஸ் அடாப்டர் உள்ளது. மேலும், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யுஎஸ்பி டைப்-சி டிஸ்ப்ளே மற்றும் சார்ஜிங் போர்ட்டை கொண்டுள்ளது.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
ஐஸ் ப்ளூ, சாஜ், சாண்ட்ஸ்டோன் மற்றும் பிளாட்டினம் ஆகிய வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. இதில் 8 ஜிபி வேரியண்ட் ரூ.66,559 என்ற விலையிலும், 16 ஜிபி வேரியண்ட் ரூ.83,199 என்ற ஆரம்ப விலையிலும் விற்பனையாக உள்ளது.
ப்ரீ ஆர்டர் சலுகை
இன்றிலிருந்து சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3-க்கான ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது. இதை அமேசான், விஜய் சேல்ஸ், மற்றும் மைக்ரோசாப்ட் ஸ்டோர் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களில் ப்ரீ ஆர்டர் செய்யலாம். வாடிக்கையாளர்களை மேலும் கவர, இன்று முதல் நவம்பர் 8ம் தேதி வரை இந்த லேப்டாப்பை ப்ரீ ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கு, மார்ஷல் மேஜர் IV வயர்லெஸ் ஹெட்செட் (ரூ. 14,999) இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற…
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த…
டெல்லி : இன்று 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தின விழா டெல்லியில், ராஜ்பதில் நடந்தது. குடியரசுத் தலைவர்…
சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் 8…
சென்னை : நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர்…