மைக்ரோசாப்ட்டின் ‘மஜோரானா 1’ அறிமுகம்.! குவாண்டம் கம்பியூட்டர் சீப்பின் புதிய அத்யாயம்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் மஜோரானா 1 எனும் குவாண்டம் சிப்பை அறிமுகம் செய்துள்ளது. இது குவாண்டம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் சிப் வகை ஆகும்.

நியூயார்க் : மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதியதாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஐ அறிமுகம் செய்தது. குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் கணினியை விட அதீத திறன் கொண்ட , நம்பத்தகாத பணிகளை செய்யும்படி உருவாக்கப்பட்ட கணினி வகைகள் ஆகும். அதில் பயன்படுத்தப்படும் வகையில் அதற்கென பிரத்யேகமாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஆன மஜோரானா 1-ஐ அறிமுகம் செய்துள்ளது.
இந்த மஜோரானா 1 குவாண்டம் சிப்பானது டோபோலாஜிக்கல் கோர் கட்டமைப்பால் இயக்கப்படும் உலகின் முதல் குவாண்டம் சிப் ஆகும். இந்த மஜோரானா 1 சிப் வகையானது இனி பல தசாப்தங்களுக்கு குவாண்டம் கம்பியூட்டர்களை செயல்படுத்தும் சிப்-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண கம்ப்யுட்டரில் விண்டோஸ் அதன் தொடர் புதுப்பிப்புகளை அறிமுகம் செய்தது போல, தற்போது குவாண்டம் கம்பியூட்டரில் பயன்படுத்த உருவாக்கப்பட்ட இந்த மஜோரானா 1 ஆனது அடுத்தடுத்த அப்டேட்களை தரும் என கூறப்படுகிறது.
இந்த மஜோரானா 1-வானது உலகின் முதல் டோபோ கண்டக்டரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது மஜோரானா செயல்பாடுளை கவனித்து அதனை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு முக்கிய பொருளாகும். இது குவாண்டம் கணினிகளுக்கான குவிட்களை (Quantum bits) உருவாக்குகிறது.
குறைக்கடத்திகளின் (Semiconductors) கண்டுபிடிப்புகள் இன்றைய ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களின் உருவாக்கத்தை சாதகமாக்கியது போலவே, டோபோ கண்டக்டர்களும் அவை செயல்படுத்தும் புதிய வகை சிப்பும் மிகவும் சிக்கலான தொழில்துறை பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் கொண்ட ஒரு மில்லியன் குவாண்டம் குவிட்களை (Quantum bits) உருவாக்குவதற்கான பாதையை வழங்குகின்றன என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இதுபற்றி மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப வல்லுநரான சேதன் நாயக் கூறுகையில், “நாங்கள் முதலில் குவாண்டம் யுகத்திற்கான டிரான்சிஸ்டரை தான் கண்டுபிடிக்க முயற்சித்தோம். அதற்கு என்ன பண்புகள் இருக்க வேண்டும என தேடினோம். அதன் தேடலில் தான் மஜோரானா 1 கண்டறியப்பட்டது. இது எங்கள் (மைக்ரோசாப்ட்) புதிய கண்டுபிடுப்புகள் லிஸ்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஜோரானா ஒரு புதிய வகையான குவிட்டையும், குவாண்டம் கம்ப்யுட்டரின் முழு கட்டமைப்பையும் செயல்படுத்தியுள்ளன.” என்று கூறினார்.
மஜோரானா 1 செயலியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் இந்தப் புதிய கட்டமைப்பானது, ஒருவரின் உள்ளங்கையில் பொருந்தக்கூடிய ஒரு சிப்பில் ஒரு மில்லியன் குவிட்களைப் பொருத்த முடியும் என்கிறது மைக்ரோசாப்ட். பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்கும் குவாண்டம் கணினிகளுக்கு இந்த மஜோரானா 1 தேவையான ஒரு கண்டுபிடிப்பாகும். ஒரு மில்லியன் குவிட் கொண்ட குவாண்டம் கணினி செய்யக்கூடியதை, தற்போது பயன்பாட்டில் இருக்கும் உலகின் அனைத்து கணினிகளும் செய்ய முடியாது என்கிறது மைக்ரோசாப்ட்.
“குவாண்டம் இடத்தில் நீங்கள் என்ன செய்தாலும், அது ஒரு மில்லியன் குவிட்களுக்கு ஒரு பாதையைக் கொண்டிருக்க வேண்டும். அது இல்லையென்றால், எங்களை ஊக்குவிக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளை நீங்கள் தீர்க்கக்கூடிய அளவை அடைவதற்குள் நீங்கள் ஒரு சுவரைத் தாக்கப் போகிறீர்கள்,” என்று நாயக் கூறினார். “நாங்கள் உண்மையில் ஒரு மில்லியனுக்கு ஒரு பாதையை உருவாக்கியுள்ளோம்.”
டோபோ கண்டக்டர் அல்லது டோபாலஜிக்கல் சூப்பர் கண்டக்டர் என்பது ஒரு சிறப்பு வகைப் பொருளாகும். இது திட, திரவ அல்லது வாயு பொருள் அல்ல. இதன் மூலம் ஒரு டோபாலஜிக்கல் நிலையை உருவாக்க முடியும். இது வேகமான, சிறிய மற்றும் டிஜிட்டல் முறையில் கட்டுப்படுத்தக்கூடிய, தற்போதைய மாற்றுகளால் தேவைப்படும் பரிமாற்றங்கள் இல்லாமல், மிகவும் நிலையான குவிட்டை உருவாக்க பயன்படுகிறது. புதன்கிழமை நேச்சரில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வறிக்கை, மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் டோபாலஜிக்கல் குவிட்டின் கவர்ச்சியான குவாண்டம் பண்புகளை எவ்வாறு உருவாக்க முடிந்தது மற்றும் அவற்றை துல்லியமாக அளவிட முடிந்தது, இது நடைமுறை கணினிக்கு அவசியமான படியாகும் என்பதை தெளிவுபடுத்தினர்.
மஜோரானா எனப்படும் புதிய குவாண்டம் சிப்களை உருவாக்குவதும், அவற்றின் தனித்துவமான பண்புகளைப் பயன்படுத்தி குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் அடுத்த அடிவானத்தை அடைவதும் எங்கள் குறிக்கோளாக இருந்தது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மஜோரானா 1 ஐ இயக்கும் உலகின் முதல் டோபோலாஜிக்கல் கோர் வடிவமைப்பு கொண்டது. வன்பொருள் மட்டத்தில் பிழை எதிர்ப்பை இணைத்து அதை மேலும் நிலையானதாக மாற்றுகிறது.
வேதியியல் எதிர்வினைகள் முதல் மூலக்கூறு தொடர்புகள் மற்றும் நொதி ஆற்றல்கள் வரை இயற்கை எவ்வாறு நம்பமுடியாத துல்லியத்துடன் செயல்படுகிறது என்பதை கணித ரீதியாக வரைபடமாக்க குவாண்டம் இயக்கவியலைப் பயன்படுத்த முடியும் என்பதால், மில்லியன்-க்யூபிட் இயந்திரங்கள் வேதியியல், பொருள் அறிவியல் மற்றும் பிற தொழில்களில் உள்ள சில வகையான சிக்கல்களைத் தீர்க்க முடியும், அவை இன்றைய பாரம்பரிய கணினிகளால் துல்லியமாகக் கணக்கிட இயலாது என மைக்ரோசாப்ட் கூறுகிறது .