மைக்ரோசாப்ட் நிறுவனம், சர்பேஸ் ஹப்2(Microsoft Surface Hub 2) என்ற டிஜிட்டல் ஒயிட்போர்டை அறிமுகப்படுத்தியது..!

Published by
Dinasuvadu desk

 

மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் ஹப்2(Microsoft Surface Hub 2) போன்ற அடுத்த தலைமுறை கான்பரன்ஸ் ரூம் டிஜிட்டல் ஒயிட்போர்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முந்தைய பதிப்பை போலவே மிகப்பெரிய தொடுதிரை வசதியுள்ள விண்டோஸ் கணிணியான சர்பேஸ்2 , ஒயிட்போர்டை போல சுவரில் பொருத்திக்கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2016 ல் வெளியான இதன் முந்தைய பதிப்பில் 1080p 55-இன்ச் மற்றும் 4K 84-இன்ச் வசதிகள் இருந்த நிலையில், இந்த சர்பேஸ்2 ல் 4k மற்றும் 3:2 விகித 55 இன்ச் தொடுதிரை வசதியுள்ளது. புதிய மாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் வடிவமைப்பு மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவாகவும் உள்ளது.

Image result for Microsoft Surface Hub 2அல்டரா தின் பேசில் உள்ள ஸ்லீக்கர் திரை வடிவமைப்பை பயன்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட். இந்த வசதி ‘டைலிங் மோட்’ (Tiling mode) எனப்படும். பல சர்பேஸ் ஹப்களை இணைத்து பெரிய திரையை உருவாக்கவும் இதன் வடிவமைப்பு அனுமதிக்கிறது. இந்த வசதியை பயன்படுத்தி செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ 4 ஒயிட்போர்டுகளை இணைத்து பெரிய திரையை உருவாக்கலாம் என்கிறது மைக்ரோசாப்ட்.

முந்தைய வெர்சன் லேண்ட்ஸ்கேப் வசதியை மட்டுமே அளித்த நிலையில், ஆச்சர்யமளிக்கும் வகையில் சர்பேஸ் ஹப் 2 போர்ட்ரேட வசதியையும் கொண்டுள்ளது. மேலும் டைனமிக் ரொடோசன் என்னும் வசதி மூலம் தானாகவே உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு திரையை மாற்றும். மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் லேப்டாப்பில் உள்ள வசதியை போல, இதிலும் பயனர்கள் லேண்ட்ஸ்கேப்லிருந்து போர்ட்ரேட் க்கு எளிதாக மாற அனுமதிக்கிறது.

இந்த சர்பேஸ் ஹப்2 ஐ சுவரில் பொறுத்த தேவையான கருவிகளை தயாரிக்கிறது மைக்ரோசாப்ட். இந்த சர்பேஸ் ஹப்2 விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 இந்த ஊடாடும் ஒயிட்போர்டுடன் இயைந்து செயல்படும் வகையில் உள்ளது.

மேலும் இதில் உள்ள விண்டோஸ் ஹலோ வசதியின் மூலம் பயனர்கள் கன்பரன்ஸ்ல் தானாகவே உள்நுழைய முடியும் மற்றும் பிங்கர்பிரிண்ட் வசதி மூலம் பலநபர் உள்நுழைவும் சாத்தியம். இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப்2 ல் 4K வெப்கேம், உள்ளார்ந்த ஸ்பீக்கர்கள் மற்றும் அறையில் உள்ள அனைவரின் கட்டளைகளை நிறைவேற்ற மைக்ரோபோன் வசதியும் உள்ளது.

Recent Posts

“பெரியார் என்ன புரட்சி செய்தார்?” – பெரியாா் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…

1 hour ago

“வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை” அதே கம்பீரத்துடன் விஷால்!

சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…

2 hours ago

“என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி’ திட்டம் ஒரு மைல் கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை:  அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…

2 hours ago

பொங்கல் வின்னர் மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

3 hours ago

“என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடனும்.. கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்..”- நடிகை குஷ்பு கலகல!

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…

4 hours ago

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…

5 hours ago