மைக்ரோசாப்ட் நிறுவனம், சர்பேஸ் ஹப்2(Microsoft Surface Hub 2) என்ற டிஜிட்டல் ஒயிட்போர்டை அறிமுகப்படுத்தியது..!
மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்பேஸ் ஹப்2(Microsoft Surface Hub 2) போன்ற அடுத்த தலைமுறை கான்பரன்ஸ் ரூம் டிஜிட்டல் ஒயிட்போர்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முந்தைய பதிப்பை போலவே மிகப்பெரிய தொடுதிரை வசதியுள்ள விண்டோஸ் கணிணியான சர்பேஸ்2 , ஒயிட்போர்டை போல சுவரில் பொருத்திக்கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
2016 ல் வெளியான இதன் முந்தைய பதிப்பில் 1080p 55-இன்ச் மற்றும் 4K 84-இன்ச் வசதிகள் இருந்த நிலையில், இந்த சர்பேஸ்2 ல் 4k மற்றும் 3:2 விகித 55 இன்ச் தொடுதிரை வசதியுள்ளது. புதிய மாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் வடிவமைப்பு மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவாகவும் உள்ளது.
அல்டரா தின் பேசில் உள்ள ஸ்லீக்கர் திரை வடிவமைப்பை பயன்படுத்தியுள்ளது மைக்ரோசாப்ட். இந்த வசதி ‘டைலிங் மோட்’ (Tiling mode) எனப்படும். பல சர்பேஸ் ஹப்களை இணைத்து பெரிய திரையை உருவாக்கவும் இதன் வடிவமைப்பு அனுமதிக்கிறது. இந்த வசதியை பயன்படுத்தி செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ 4 ஒயிட்போர்டுகளை இணைத்து பெரிய திரையை உருவாக்கலாம் என்கிறது மைக்ரோசாப்ட்.
முந்தைய வெர்சன் லேண்ட்ஸ்கேப் வசதியை மட்டுமே அளித்த நிலையில், ஆச்சர்யமளிக்கும் வகையில் சர்பேஸ் ஹப் 2 போர்ட்ரேட வசதியையும் கொண்டுள்ளது. மேலும் டைனமிக் ரொடோசன் என்னும் வசதி மூலம் தானாகவே உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு திரையை மாற்றும். மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் லேப்டாப்பில் உள்ள வசதியை போல, இதிலும் பயனர்கள் லேண்ட்ஸ்கேப்லிருந்து போர்ட்ரேட் க்கு எளிதாக மாற அனுமதிக்கிறது.
இந்த சர்பேஸ் ஹப்2 ஐ சுவரில் பொறுத்த தேவையான கருவிகளை தயாரிக்கிறது மைக்ரோசாப்ட். இந்த சர்பேஸ் ஹப்2 விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 இந்த ஊடாடும் ஒயிட்போர்டுடன் இயைந்து செயல்படும் வகையில் உள்ளது.
மேலும் இதில் உள்ள விண்டோஸ் ஹலோ வசதியின் மூலம் பயனர்கள் கன்பரன்ஸ்ல் தானாகவே உள்நுழைய முடியும் மற்றும் பிங்கர்பிரிண்ட் வசதி மூலம் பலநபர் உள்நுழைவும் சாத்தியம். இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப்2 ல் 4K வெப்கேம், உள்ளார்ந்த ஸ்பீக்கர்கள் மற்றும் அறையில் உள்ள அனைவரின் கட்டளைகளை நிறைவேற்ற மைக்ரோபோன் வசதியும் உள்ளது.