நோக்கியா(Nokia)விற்கு சவால்விடும் மைக்ரோமேக்ஸ்(Micromax) போன்.! வெல்லப்போவது யார்??
HMD குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியாவின் புதிய மாடலான நோக்கியா 8110 என்ற மாடலை அறிமுகம் செய்தது இந்நிறுவனம். ஸ்லைடர் மாடலில் உருவாக்கப்பட்டிருந்த இந்த மாடல் 4G தன்மையுடன் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றது இந்த புதிய மாடல்போன்.
இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்தபோது, மைக்ரோமேக்ஸ் பாரத் 1 என்ற மாடல் உள்பட பல 4G மாடலுடன் போட்டியிடுகிறது.
இந்த நோக்கியா 8110 மாடல் போன் பழைய ஸ்லைடர் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேசிக் போன்(basic) மாடலில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த போனின் ஸ்லைடரில் கீபேட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பட்டனை அழுத்தி ஸ்லைடரை ஓப்பன் செய்து நீங்கள் அழைப்பில் பேசலாம். நோக்கியா 8110 மாடலின் டிஸ்ப்ளே 2.45 இன்ச் QVGA மற்றும் 240/320 பிக்சல் ரெசலூசன் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோமேக்ஸ் பாரத் 1 மாடலை ஒப்பிடும்போது கூடுதல் வசதியுடன் தென்படுகிறது. இந்த மாடலின் 2.45 இன்ச் கலர் டிஸ்ப்ளே மற்றும் கீபேட் முன்பக்கத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் மைக்ரோமேக்ஸ் அதிக தரத்துடன் உள்ளது. மேலும் பாரத் 1 மாடல் மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5மிமீ ஹெட்போன் மற்றும் எல்.ஈ.டி டார்ச் வசதியுடன் உள்ளது.
நோக்கியா 8110 4G மாடல் போனில் 1.1Ghz டூயல் கோர் குவால்காம் 205 பிராஸசர் உள்ளது. மேலும் இதில் 12MB ரேம் வசதி உண்டு. மேலும் இந்த மாடலில் 4GB இண்டர்னல் ஸ்டோரேஜும், கூடுதல் ஸ்டோரேஜ் பெற்றுக்கொள்ள மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் உண்டு. இந்த மாடலில் 2MP பின்பக்க கேமிரா மற்றும் எல்.ஈ.டி பிளாஷ் வசதி உண்டு. பேட்டரியின் சக்தி 1500mAh வகையிலும், 25 மணி நேரம் சார்ஜ் நிற்கும் வகையிலும் 9.30 மணிநேரம் பேசும் வகையிலும் உள்ளது.
இதேபோல் மைக்ரோமேக்ஸ் பாரத் 1 மாடலில் குவால்கோம் 205 பிராஸசர் மற்றும் 512MB ரேம், 4GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்கள் உண்டு. அதிக ஸ்டோரேஜ் தேவைப்பட்டால் 128 GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த மாடலின் கேமிரா 2MP அளவிலும் உள்ளது. இந்த மாடலின் பேட்டரி 2000mAh என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 8110 மாடல் இந்திய ரூபாயில் ரூ.6000 என்ற விலையில் கிடைக்கும். இன்னும் இந்த போனின் விலை இந்தியாவில் குறைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் மைக்ரோமேக்ஸ் பாரத் 1 மாடலின் விலை ரூ.2200 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.
Micromax to challenge Nokia (Nokia) Who will win?