ஐகிளவுடில் மெசேஜ் வசதியை பயன்படுத்தும் முறை..!
ஐபோன் பயனாளிகளில்ஐஒஎஸ் 11.4 வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதியாக ஐகிளவுட் மூலம் மெசேஜ் அனுப்பும் வசதி கிடைத்துள்ளது.
நீங்களும் ஐபோனில் இந்த வெர்ஷனை பயன்படுத்துபவராக இருந்து இந்த ஐகிளவுட் வசதி குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் கீழே உள்ள தகவல்கள் உங்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகிறோம். இந்த புதிய வசதியை எப்படி பயன்படுத்த வேண்டும், இதனால் என்னென்ன பயன்கள் என்பது குறித்து அறிய கீழே படியுங்கள்
1. ஐகிளவுட் மெசேஜை ஆன் செய்ய சுவிட்ச் செய்வது எப்படி?
ஐஓஎஸ் 11.4 பீட்டே நிலையில் இருந்தபோதே ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐகிளவுடில் உள்நுழைவது எப்படி என்பது குறித்து அறிமுகம் செய்துவிட்டது. தற்போது ஐஒஎஸ் 11.4 அதிகாரபூர்வமாக வெளிவந்துவிட்டதால் இந்த வசதியை உள்நுழைந்தவர்கள் எளிதாக ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். அதற்கு கீழே கொடுக்கப்பட்ட வழிகளை பின்பற்றவும்.
1. உங்களுடைய ஆப்பிள் சாதனத்தை அதாவது ஐபோன், ஐபேட் அல்லது ஐபேட் டச் ஆகியவற்றை முதலில் ஐஒஎஸ் 11.4 க்கு அப்டேட் செய்ய வேண்டும்
2. இரண்டு வழிகளில் உள்நுழைதல் முறைகளை பின்பற்ற வேண்டும்
3. உங்கள் சாதனத்தில் செட்டிங் அப்ளிகேசனை அக்சஸ் செய்ய வேண்டும்
4. இதன் பின்னர் உங்கள் பெயரை பதிவு செய்யவோ அல்லது சைன் – இன் செய்யவோ ஆப்சன் ஒன்று வரும்
5. அதன் பின்னர் ஐகிளவுடை டேப் செய்யவும்
6. இதன்பின்னர் மெசேஜ் டேகிள் பொசிஸனில் உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
இந்த ஐகிளவுட் மெசேஜ் சிஸ்டம் என்பது ஒரு மாடர்ன் மெயில் போன்றது. இது அனைத்து ஐஒஎஸ் சாதனங்களிலும் சைன் இன் செய்யும் வகையில் இருக்கும். இதில் உங்கள் இன்பாக்ஸில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை அனுமதிக்கும். உங்களை பயமுறுத்தும் இமெயில் ஏதாவது வந்தால் அதை உங்கள் ஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களில் தனித்தனியாக செய்ய வேண்டாம். ஒரு மெசேஜை ஒரு சாதனத்தில் டெலிட் செய்துவிட்டால் அது தானாகவே இன்னொரு ஐஒஎஸ் சாதனத்திலும் டெலிட் செய்யப்பட்டுவிடும்
அதேபோல் உங்களுடைய மெசேஜ் சேவ் செய்யப்பட்டிருந்தால் உங்கள் புதிய சாதனத்திலும் பழைய மெசேஜ்களை பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் தெரியாமல் ஒரு மெசேஜை டெலிட் செய்துவிட்டால், உடனே ஐகிளவுட் அந்த மெசேஜை டெலிட் செய்ய வேண்டுமா? என்பதை ஒரு பாப்-அப் மூலம் உங்களிடம் உறுதிமொழி கேட்கும்.
ஐகிளவுட் விலை என்ன என்று தெரியுமா?
ஐகிளவுட் தனது வாடிக்கையாளர்களுக்காக 5ஜிபி அளவுக்கு இலவச மெசேஜ்களுக்கு அனுமதித்தாலும், இந்த அளவு அதிகமான புகைப்படம், வீடியோ மற்றும் பெரிய ஃபைல்களை அனுப்பும்போது இன்னும் அதிகமாக ஜிபி தேவைப்படும்.
1. 50 ஜிபி அளவு: ரூ.75
2. 200 ஜிபி அளவு: ரூ.219
3. 2டிபி அளவு: ரூ.749
ஐஒஎஸ்
ஐகிளவுட் வசதிகள் என்னதான் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயனுள்ள அம்சமாக இருந்தாலும், அவை ஒருசில இடங்களில் வேலை செய்யாது. மேக் ஐஒஎஸ்-இல் இந்த ஐகிளவுட் வேலை செய்யாது.