நம்ம மார்க்-க்கு வந்த அதிர்ஷ்டத்த பாருங்க மக்களே..! பலரின் உலக சாதனையை தூக்கி சாப்டுட்டாரு..!

Default Image

உலக சாதனை என்பது எல்லோராலும் சாத்திப்பட்டாலும் ஒரு சிலர் மட்டுமே அந்த சாதனை கோட்டை முழுவதுமாக கடந்து வென்று நிற்கின்றனர். அந்த வகையில் இப்போது முகநூலின் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்கும் இணைத்துள்ளார். சமீப காலமாக முகநூலை பற்றிய பலவித சர்ச்சைகளை நாம் கேட்டிருப்போம்.

மக்களின் தகவலை திருடி விற்பதாகவும், மக்களின் தகவலை வைத்து முழுவதுமாக வியாபாரமாக்குவதாகவும் மார்க்கின் மீது பல குற்றசாட்டுகளை அவரின் சொந்த நாடான அமெரிக்காவே முன் வைத்தது. இப்படி பல தடைகள் இருந்தாலும் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சாதனையை படைத்துள்ளார். என்ன சாதனை என்பதை இனி அறியலாம்.

உலக பணக்காரர்கள்
உலகின் பணக்காரர் பாட்டியலை வெளியிடும் புளூம்பர்க் நிறுவனம் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, உலகின் முதல் 5 இடங்களை பிடித்த பணக்காரர்கள் 5 பேரும் டெக்னாலஜி சார்ந்த பின்னனியில் இயங்கி கொண்டிருப்பதாக வெளியிட்டது. அந்த 5 பேரில் நம்ம மார்க்-கும் உள்ளார்.

உலக சாதனை
பலவித சிக்கல்களை கடந்த வருடங்களில் சந்தித்து வந்தாலும் இவரின் முதலீட்டாளர்கள் முகநூலுக்கு ஆதரவு தெரிவித்தே வந்தனர். இது தான் மார்க்கிற்கு மிக பலமான பாலமாக அமைந்தது. புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்ட செய்தியில் மார்க் உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மதிப்பு எவ்வளவு?
இதுவரை இவரின் சொத்து மதிப்பு 81.6 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 5.61 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிட பட்டுள்ளது. இந்த சாதனை உலகின் மிக பெரும் முந்தைய பணக்காரரான வாரென் பஃபெட்டின் சொத்து மதிப்பை விட பல மடங்கு அதிகம்.

எதிர்க்காலம்?
இதே நிலை நீடித்தால் உலகின் இரண்டு, மற்றும் முதல் இடங்களை இவரே பிடித்து விட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதிலிருந்தே டெக்னாலஜியை எப்படி பணமாக மாற்றுகிறார்கள் என்கிற தந்திரத்தை நாமும் புரிந்து கொள்ள இயலும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்