சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மார்க் ஜுக்கர்பெர்க் இன்று ஒரு புதிய தனித்த மெட்டா AI செயலி வெளிவருவதாக அறிவித்தார்.

meta ai chatgpt

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI தனி ஆப் வெளியிடப்பட்டதாக அறிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ” புதிய Meta AI ஆப் இன்று வெளியாகிறது!  Meta AI ஆனது எங்கள் புதிய Llama 4 மொழி மாதிரியால் இயக்கப்படுகிறது. இது OpenAI, Google, Deepseek, மற்றும் Anthropic ஆகியவற்றின் சமீபத்திய AI மாடல்களுக்கு இணையாக பல திறன்கள் மேம்படுத்தப்பட்ட பல வசதிகள் உள்ளது.

இன்று நாங்கள் அறிமுகம் செய்துள்ள AI டெவலப்பர் மாநாடான LlamaCon-ஐ நடத்துகிறோம், இது Llama மாடல்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன். இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள  Meta AI ஆனது 2025 இறுதிக்குள் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை அடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் இந்த தனி ஆப் அதற்கு முக்கியமான படியாக இருக்கும்.” எனவும் கூறியுள்ளார்.

ஆப் குறித்து…

மெட்டா அறிமுகம் செய்துள்ள Meta AI ஆப்  iOS (Apple App Store) மற்றும் Android (Google Play Store) தளங்களில் கிடைக்கிறது. இந்த ஆப், Meta-வின் பிற பயன்பாடுகளை (Facebook, Instagram போன்றவை) பயன்படுத்தாமல், Meta AI-ஐ நேரடியாக பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம், Meta AI-ஐ ஒரு தனித்த உதவியாளராகப் பயன்படுத்த முடியும், இது OpenAI-இன் ChatGPT ஆப் அல்லது Google-இன் Gemini ஆப் போன்றவற்றைப் போல செயல்படுகிறது.

என்ன பலன்கள்? 

  • கேள்விகளுக்கு பதில் பெறலாம்: உதாரணமாக, “சென்னையில் இன்றைய வானிலை எப்படி?” என்று கேட்கலாம். அதற்கு உங்களுக்கான பதிலை கொடுக்கும்.
  • படங்கள் உருவாக்கலாம்: AI-ஐப் பயன்படுத்தி புகைப்படங்கள் அல்லது கிராஃபிக்ஸ் உருவாக்கலாம்.
  • மொழிபெயர்ப்பு செய்யலாம்: தமிழ் உரையை ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கலாம்.
  • சமூக ஊடகங்களுடன் இணைப்பு: Facebook, Instagram, WhatsApp உடன் இணைந்து, உதாரணமாக, Instagram Reels உருவாக்குவது போன்றவற்றைச் செய்யலாம்.

திடீரென இந்த ஆப் எதற்கு? 

Meta AI பொறுத்தவரையில், இதுவரை Facebook, Instagram, WhatsApp, மற்றும் Messenger போன்றவற்றில் மட்டுமே Meta-வின் பயன்பாடுகளுக்குள் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்த தனி ஆப், Meta-வின் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தாதவர்களையும் மெட்டா AI -ஐ பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஓபன்ஏஐ-இன் சாட்ஜிபிடி, Google-இன் Gemini, மற்றும் xAI-இன் Grok போன்றவை தனி ஆப்களாக வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. எனவே, அதற்கு இணையாக மெட்டா AI செயலியையும் போட்டிக்கு கொண்டு வந்து பெரிய வளர்ச்சியடைய மார்க் ஜுக்கர்பெர்க் கொண்டு வந்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்