பல புதிய பேஸ்புக் கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வருகிறது ..!!

Default Image

கடந்த வியாழக்கிழமை டெக் க்ரன்ச் தளத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் இருந்து மெசேன்ஜர் வழியாக, பெரும்பாலான மக்களுக்கு கிடைத்தவொரு மெசேஜ் ஆனது மறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட உடனேயே, அனுப்பிய மெசேஜை திரும்பப் பெறுவதற்கான திறனை விரைவில் அனைத்து மெசேன்ஜர் பயனர்களுக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் கூறப்படும் “unsend” அம்சம் வெளியாகும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.  பேஸ்புக் நிறுவனத்தின்படி, 2014-ல் நடந்த சோனி கார்ப். டேட்டா ஹேக்கிங் சம்பவத்திற்கு பின்னரே, இந்த அம்சம் உருவாக்கம் பெற்றுள்ளது

ஏற்கனவே உள்ள (ரீவோக் அல்லது) டெலிட் பார் எவ்ரிஒன் அம்சம் தான் பேஸ்புக் மெசேன்ஜரிலும் இடம்பெறவுள்ளது. இந்த அம்சம் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிற பேஸ்புக் நிர்வாகிகளுக்கு ஏற்கனவே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“குறிப்பிட்ட டெலிட் மெசேஜ் அம்சமானது, அனைவருக்கும் கிடைக்கும் ஒரு பொதுவான அம்சமாக உருட்டப்பட சிறிது நேரம் ஆகலாம். இந்த அம்சம் தயாராகும் வரை, நாங்கள் எந்த பேஸ்புக் நிர்வாகிகளுடைய செய்திகளையும் நீக்க மாட்டோம். இதை நாங்கள் மிக விரைவாக செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்ததற்கு வருந்துகிறோம்” என்று பேஸ்புக் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா டேட்டா ஊழலை அடுத்து, வரலாறு காணாத அளவிலான, மிக மோசமான ப்ரைவஸி நெருக்கடிக்குள் பேஸ்புக் சிக்கி தவிக்கிறது என்பதும் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் பல புதிய பேஸ்புக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

India beat Bangladesh
India Women Won
ENGWvsBANW
Australia Womens Won the match
AIRTEL JIO BSNL
Tamilnadu CM MK Stalin talk about Samsung workers protest