வாட்ஸ்அப் சேனல் வச்சிருக்கீங்களா? உங்களுக்காகவே சூப்பர் அப்டேட்ஸ் இதோ!
உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக அப்டேட்டுகளும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வாட்ஸ்அப் சேனல் கிரியேட் செய்துகொள்ளும் அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொன்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த வாட்ஸ்அப் சேனலில் பல புது அப்டேட்கள் கொண்டு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
OPPO Reno 11 சீரியஸ்… மீடியாடெக் டைமன்சிட்டி சிப்களுடன் இந்தியாவில் அறிமுகம்!
இப்போது கொண்டுவரவுள்ள அப்டேட்டுகள் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் பேசுகையில் ” வாட்சப் சேனல்களுக்கு குரல் செய்தி, பல அட்மின், ஸ்டேட்டஸ் பகிர்தல் மற்றும் வாக்கெடுப்பு உட்பட பல புதிய அம்சங்களை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்” என அறிவித்துள்ளார். அது என்னென்ன அப்டேட் என்பதனை பற்றி விவரமாக பார்க்கலாம்.
வாக்கெடுப்பு (Voting Poll)
- இனிமேல் வாட்சப் சேனல்களில்( Voting Poll ) உருவாக்கிக்கொள்ளலாம். இந்த அம்சம் மூலம் சேனல் நிர்வாகிகள் தங்கள் பார்வையாளர்களின் கருத்துகள் மற்றும் விருப்பங்களை நேரடியாக கேட்டுக்கொள்ளமுடியும். கருத்துக்கணிப்புகளுடன், பயனர்கள் சுருக்கமான கேள்விகளை உருவாக்கவும் இந்த வசதி உதவும்.
சேனலில் பல நிர்வாகிகள் (Admin)
- வாட்சப் சேனல் அப்டேட் வந்ததில் இருந்து அதில் ஒருவர் மற்றும் இரண்டு பேர் மட்டுமே நிர்வாகிகள் (Admin)-ஆகா இருக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. பலரும் (Admin)-ஆகா இருக்கும் வசதி கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என காத்திருந்த நிலையில், அதற்கான அப்டேட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் எத்தனை பேர் வேண்டுமானாலும் வாட்சப் சேனலில் (Admin)-ஆகா இருக்கலாம்.
ஸ்டேட்டஸ் (status)
- வழக்கமாகி வாட்சப் நம்பரில் மட்டுமே ஸ்டேட்ஸ் வைக்கும் வசதி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது சேனலிலும் இனிமேல் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
குரல் (voice message)
- இப்போது கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால், குரல் புதுப்பிப்புகள் (voice message) என்று கூறலாம். இந்த வசதி மூலம் சேனல் நிர்வாகிகள் தங்களைப் பின்தொடர்பவர்களுடன் மேலும் தொடர்புகொள்ள குரல் குறிப்புகளை அனுப்ப உதவுகிறது.
மேலும் இந்த வாட்ஸ்அப் புதிய அம்சங்களை ஆண்ட்ராய்டு, iOS மற்றும் இணையம் முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் படிப்படியாக அவை உலகம் முழுவதும் இருக்கும் வாட்சப் பயனர்களுக்கு கிடைக்கும்.