தொலைந்த போன்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும் இது உதவும் அரசின் ‘சஞ்சார் சாத்தி ‘ இணையதளம் தொடங்கப்பட்டது.
பொதுவாக ஒருவரின் போனை தொலைத்து விட்டாலோ அல்லது அது திருடப்பட்டு விட்டாலோ அதனை கண்டு பிடிப்பது எளிதான விஷயம் இல்லை. ஏனென்றால், தொலைந்து போன அந்த போன் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. ஆனால், இனிமேல் நம்முடைய போன் தொலைந்துவிட்டால் கவலையே வேண்டாம், ஏனெனில், போனை கண்டுபிடிக்க மத்திய அரசு ‘சஞ்சார் சாத்தி‘ என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இணையதளத்தை மத்திய டெலிமேடிக்ஸ் துறைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு மையம் (CDoT) மத்திய உபகரண அடையாள பதிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரின் போன் காணாமல் போய்விட்டது என்றால், அந்த போன்களின் 15 இலக்க தனித்துவ அடையாள ‘‘ஐஎம்இஐ’’ எண்ணைக் கொண்டு அந்த போன் எங்கு இருக்கிறது. என்ற அதனுடைய இருப்பிடத்தை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். அதைப்போல, அதனை பயன்படுத்த முடியாதவாறு முடக்கவும் முடியும். இந்த “சஞ்சார் சாத்தி” ( Sanchar Sathi) இணையதளம் இன்று முதல் தொடங்கப்பட்டது.
எப்படி புகார் கொடுக்கவேண்டும்..?
முதலில் உங்களுடைய போன் தொலைந்துவிட்டது அல்லது திருடு போய்விட்டது என்றால் https://sancharsaathi.gov.in/இணையதளத்திற்கு சென்று புகார்களை அளிக்கலாம். இணையதளத்திற்கு சென்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை பதிவு போதும் தொலைந்துபோன உங்கள் போனை கண்டுபிடித்து தடை செய்யபட்டுவிடும். மேலும், இந்த இணையதளத்தில் புகார் அளிக்கும் தகவல்கள் சரியானதாக இருந்தது என்றால், புகார் அளித்த அடுத்த 24 மணி நேரத்தில் அவற்றை கண்காணித்து மீட்கும் பணியை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…