பொதுவாக ஒருவரின் போனை தொலைத்து விட்டாலோ அல்லது அது திருடப்பட்டு விட்டாலோ அதனை கண்டு பிடிப்பது எளிதான விஷயம் இல்லை. ஏனென்றால், தொலைந்து போன அந்த போன் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. ஆனால், இனிமேல் நம்முடைய போன் தொலைந்துவிட்டால் கவலையே வேண்டாம், ஏனெனில், போனை கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய தொழில்நுட்பத்தை இந்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த வாரம் அரசாங்கத்தால் ஒரு கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் இந்தியா முழுவதும் தங்கள் தொலைந்த அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களைத் கண்காணிக்கவும் முடியும் என கூறப்படுகிறது.
மத்திய டெலிமேடிக்ஸ் துறைக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்பு மையம் (CDoT) மத்திய உபகரண அடையாள பதிவு தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரின் போன் காணாமல் போய்விட்டது என்றால், அந்த போன்களின் 15 இலக்க தனித்துவ அடையாள ‘‘ஐஎம்இஐ’’ எண்ணைக் கொண்டு அந்த போன் எங்கு இருக்கிறது என்ற அதனுடைய இருப்பிடத்தை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். அதைப்போல, அதனை பயன்படுத்த முடியாதவாறு முடக்கவும் முடியும்.
மேலும், இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு “சஞ்சார் சாத்தி” ( Sanchar Sathi) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…