Lava Yuva 3 Pro [Image Source : Lava]
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா (Lava) பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் பிரிவில் புதிய வரவாக லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. யுவா 3 ப்ரோ ஆனது பிரீமியம் கிளாஸ் பேக் டிசைன் உடன் 8ஜிபி ரேம் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது.
இதில் பஞ்ச்-ஹோல் கட்டவுட்டுடன் 1600 x 720 பிக்சல் ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. யூனிசோக் டி616 ஆக்டா கோர் பிராசஸர் உடன் விளம்பரங்கள் மற்றும் ப்ளோட்வேர் இல்லாத ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உள்ளது. இரண்டு வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும்.
இதன் பின்புறத்தில் 50 எம்பி ஏஐ டூயல் கேமராவும், முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் 18 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வைஃபை, ப்ளூடூத் 5.0, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் போன்றவையும் உள்ளன.
இந்த லாவா யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரு மாடல் மட்டுமே டெசர்ட் கோல்ட், ஃபாரஸ்ட் விரிடியன் மற்றும் மெடோ பர்பில் ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.8,999 ஆகும். இந்த போனை லாவா இ-ஸ்டோர் மற்றும் நாடு முழுவதும் உள்ள லாவா ஸ்டோர்களில் வாங்கிக்கொள்ளலாம்.
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…